மேலும் அறிய

EPS Vs Vijay: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் - விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், புதிதாக தொடங்கியுள்ள கட்சியினர் கூட பாராட்டும் அளவிற்கு ஆட்சி நடத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் மோரினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்படாமல் இருக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்படும் என்று கூறினார்.

EPS Vs Vijay: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் - விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் திறமையற்ற முதலமைச்சராக இருப்பதாகவும் குறை கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என நடிகர் விஜய் பேசி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், அது அவருடைய கருத்து. ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளர்ச்சிக்காகவும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள் என கூறினார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

EPS Vs Vijay: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் - விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக குறித்தும், அதிமுக தலைவர்கள் குறித்தும் நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், புதிதாக தொடங்கியுள்ள கட்சியினர் கூட பாராட்டும் அளவிற்கு ஆட்சி நடத்தியுள்ளார்கள். அதனால் தான் யாராலும் விமர்சிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று இருப்பது குறித்த கேள்வி, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
Embed widget