மேலும் அறிய

DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை... 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்தில் இறந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை... 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

முதல்வர் வருகை:

இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (20 ஆம் தேதி) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு பெத்தநாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக நாளை மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார். பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகனங்கள் பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் திறந்து வைக்க உள்ளார். 

DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை... 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

நிகழ்ச்சி நிரல்:

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு 21ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இது மட்டும் இன்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர். இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளது. 

முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் பெத்தநாயக்கன்பாளையம் வரை 20 அடிக்கு ஒரு மின் விளக்கு என 65 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கொடி சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget