மேலும் அறிய

தருமபுரி: நிரம்பி வழிந்த வாணியாறு அணை..வினாடிக்கு 80 கன அடி நீர் வெளியேற்றம்

பாப்பிரெட்டிபட்டி அடுத்த வாணியாறு அணை நிரம்பியதால், உபரிநீர் வினாடிக்கு 80 கன அடி ஆற்றில் திறப்பு.பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
 
இந்நிலையில், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை மீது தினந்தோறும் கனமழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. தொடர் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடி வரை இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது மழை குறைந்து வருவதால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம், 64 அடி உயரத்தில் தற்போது 62 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 80 கன அடி உபரி நீர், வாணியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. 
 
தருமபுரி: நிரம்பி வழிந்த வாணியாறு அணை..வினாடிக்கு 80 கன அடி நீர் வெளியேற்றம்

இதனால் அணையில் தண்ணீர் வெளியேறும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்து வருகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து, அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் வாணியாறு ஆற்றங்கரையோரம் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஜீவா நகர், மெனசி, பூதநத்தம் அம்மாபாளையம், பறையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வாணியாற்றில் இறங்குவோ,  கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்  எப்பொழுதும் வாணியாறு அணை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிரம்பும் நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே நிரம்பியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் மழை பொழிந்தால், கடந்த ஆண்டை போலவே உபரிநீரிலே பாசன ஏரிகள் முழுவதும் நிரம்பும் வாய்ப்புள்ளதால், பாசன விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget