மேலும் அறிய
Advertisement
அரூரில் மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
அரூர்-சேலம் பிரதான சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, சந்தைமேடு, கடைவீதி, பேருந்து நிலையம், வர்ணதீர்த்தம், நீதிமன்ற வழியாக ரவுண்டானாவில் நிறைவு
தருமபுரி மாவட்டம் அரூரில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி சார்பில் புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடைபெற்றது. தொடர்ந்து கல்லூரி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அரூர் டிஎஸ்பி பாத்திமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையிலை பயன்படுத்துவது மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் பொருந்திய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.
மேலும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். தொடர்ந்து அரூர்-சேலம் பிரதான சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, சந்தைமேடு, கடைவீதி, பேருந்து நிலையம், வர்ணதீர்த்தம், நீதிமன்ற வழியாக ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
தருமபுரி நகராட்சி நியமன குழு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த 5 பேரும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் என 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
நடந்து முடிந்த நகர் மன்ற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 20 வார்டுகள் திமுகவும், 13 வார்டுகளில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றனர். அதனையடுத்து இன்று நடைபெற்ற நியமன குழு உறுப்பினர், வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர், ஒப்பந்த குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் நியமன குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் 20 வது வார்டு உறுப்பினர் செல்வி சுருளிராஜன், வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவிக்கு திமுகவை சேர்ந்த 17 வது வார்டு உறுப்பினர் சமயா, 21 வது வார்டு உறுப்பினர் சந்திரா, 28 வது வார்டு உறுப்பினர் சம்மந்தம் மற்றும் அதிமுகவை 31 வது வார்டு உறுப்பினர் மாதேஸ் ஆகிய பேரும், அதே போல் ஒப்பந்த குழு உறுப்பினர் பதவிக்கு திமுகவை செர்ந்த 16 வது வார்டு உறுப்பினர் மோகன் ஆகிய 6 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யாததால், மனுதாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நகர் மன்ற தலைவர் லட்சுமி மாது, மற்றும் துணை தலைவர் நித்யா அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion