மேலும் அறிய
Advertisement
பொங்கல் பரிசுக்காக அண்டை மாநிலங்களில் வெல்லம் கொள்முதல் - உள்ளூர் தயாரிப்பாளர்கள் வேதனை
கரும்பை போலவே, உருண்டை வெல்லத்தையும், அந்தந்த மாவட்டத்திலே கொள்முதல் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். அப்பொழுது தான் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும்
தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.
தற்போது பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், உருண்டை வெல்லம் தயாரிக்க தேவையான கரும்பு தருமபுரி மாவட்டத்திலேயே கிடைக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிற்பம் 1260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் இந்தாண்டு ஆலைகள் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட முன் பதிவு குறைவாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல்ஹபரிசு தொகுப்பில் உருண்டை வெல்லம் வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் இந்தாண்டு, பொங்கல் தொகுப்பு உருண்டை வெல்லம் வழங்க உத்திரவிட்டார். ஆனால் அதற்கான உருண்டை வெல்லம் தமிழகத்தில் வாங்காமல் அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் செங்கரும்பு அந்தந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வினியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதைப்போலவே, உருண்டை வெல்லத்தையும், அந்தந்த மாவட்டத்திலே கொள்முதல் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். அப்பொழுது தான் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும், வாழ்வாதாரம் உயரும் என உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion