மேலும் அறிய
Advertisement
தர்மபுரி: முதன்முறையாக கோடையில் நிரம்பிய பறையப்பட்டி புதூர் ஏரி.. விவசாயிகள் மகிழ்ச்சி
இதுவரை இல்லாத அளவில் கோடை காலத்தில் பெய்த மழையால் ஏரி நிரம்பியுள்ளது இதுவே முதல் முறை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பறையப்பட்டி புதூர் ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதன் லம் பறையப்பட்டி புதூர், பறையப்பட்டி, கோபிநாதம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பட்டவர்த்தி, கொக்கராப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், ஏரி நிரம்பி கோடி எடுத்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதில் அரூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இதனால் பறையப்பட்டி புதூர் ஏரி முழு கொள்ளவை எட்டி, நிரம்பி வழிகிறது. இதுவரை இல்லாத அளவில் கோடை காலத்தில் பெய்த மழையால் ஏரி நிரம்பியுள்ளது இதுவே முதல் முறை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஏரி நிரம்பிய, நிலையில் தற்போது மீண்டும் பறையப்பட்டி ஏரி நிரம்பியதால், கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு#petrol #dieselhttps://t.co/wgquk7DRem
— ABP Nadu (@abpnadu) May 21, 2022
சமூக வலைதளங்களில் பரவும் மிரட்டல் ஆடியோ - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..! #AnithaRadhakrishnan #DMK #Thoothukudi #Tuticorin pic.twitter.com/tZ645v5Xu4
— ABP Nadu (@abpnadu) May 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion