மேலும் அறிய
Advertisement
பதவி விலக முடியாது; கட்சியை விட்டுவேண்டுமானால் நீக்கி கொள்ளுங்கள் - திமுக தலைமைக்கு சவால் விடும் பெண் பேரூராட்சி தலைவர்
பேரூராட்சி தலைவராக வெற்ற பெற்ற சாந்தி புஷ்பராஜ் இன்று பேரூராட்சிக்குட்பட்ட அலுவலகத்திற்கு வந்து தலைவருக்கான அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு பெற்று கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என கூட்டணி கட்சிக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். இதனை அறிந்த கூட்டணி கட்சியினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர். இதனை அடுத்து தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் உடனடியாக தங்களது பதவியை விலக வேண்டும். அதனை கூட்டணி கட்சியினருக்கு விட்டுத்தர வேண்டும் என உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.
இதனை அடுத்து ஒரு சில இடங்களில் திமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேருராட்சி திமுக கூட்டணியில் விசிகவிற்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் திமுகவைச் சார்ந்த புஷ்பராஜ் மனைவி சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் விசிக சார்பில் போட்டியிட்ட சின்ன வேடி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் திமுக தலைவரின் அறிக்கைக்குப் பிறகு புஷ்பராஜ் மனைவி சாந்தியை ராஜினாமா செய்ய வேண்டுமென திமுகவினரும் வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து கடந்த 5 நாட்களாக புஷ்பராஜ் இடம் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புஷ்பராஜ் பதவி விலக முடியாது, தன்னை கட்சி விட்டு வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், வெற்றி பெற்றுள்ள திமுக உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என சமரசம் செய்து வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சி தலைவராக வெற்ற பெற்ற சாந்தி புஷ்பராஜ் இன்று பேரூராட்சிக்குட்பட்ட அலுவலகத்திற்கு வந்து தலைவருக்கான அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும இன்று பேரூராட்சி தலைவராக சாந்தி பொறுப்பேற்றதாக பேசப்படுகிறது. இதனால் திமுக மற்றும் விசிக நிர்வாகிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி உறுப்பினர்கள் அழைத்து, அஜந்தா தயார் செய்து, உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டு தான் தலைவர்கள் பொறுப்பேற்க முடியும். இன்று அதுமாதரியான முறையான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால் சாந்தி புஷ்பராஜ் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முறையில், இருக்கையில் வந்து அமர்ந்ததாக பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு முறையாக உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுத்து பதவி ஏற்பு நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் பிரச்சினைக்குரிய முறையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி இருப்பதால், திமுக மற்றும் விசிகவினை குழப்பி, திசை திருப்பவே இன்று சாந்தி புஷ்பராஜ் அலுவலகத்திற்கு வந்ததாகவும், பொறுப்பேற்றுக் கொண்டதாக சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் திமுக, விசிகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion