மேலும் அறிய
Advertisement
கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தையில் கால்நடைகள் விலை அதிகரிப்பு - ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
10 கிலோ எடை கொண்ட ஆடு பத்தாயிரத்திற்கு விற்பனையானது. ஆடு 2000 முதல் அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் கால்நடைகள் வரத்து மற்றும் விலை அதிகரித்துள்ளது. சுமார் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சந்தைக்கு தருமபுரி, மாவட்டம் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் விவசாயிகள் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். வழக்கமான சந்தையில் இரண்டு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சுமார் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இன்றைய வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காக மற்றும் கால்நடை என வளர்ப்புக்காக வாங்குவதற்கு ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் குவிந்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும் அதிகாலை 4 மணி முதல் கால்நடைகளை வாங்குவதற்கு பொதுமக்களும் விவசாயிகளும் வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் வார சந்தையில் வழக்கத்தைவிட ஆடு, மாடுகள் வரத்தை அதிகரித்து இருந்தது. இன்றைய வார சந்தைக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளும் 2000க்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் ஆடு மாடுகளின் விலை தீபாவளி பண்டிகை முன்னிட்டு 2000 முதல் 5 ஆயிரம் வரை உயர்ந்து விற்பனையானது. இதில் பிறந்து நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் ஆன ஆட்டுக்குட்டிகள் 2000-க்கு விற்பனையானது. அதேபோல் 10 கிலோ எடை கொண்ட ஆடு பத்தாயிரத்திற்கு விற்பனையானது. ஆடு 2000 முதல் அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை விற்பனையானது.
அதேபோல் மாடுகள் வளர்ப்பு கன்று குட்டிகள் 8000 முதல் அதிகபட்சமாக 70 ஆயிரம் வரை விற்பனையானது. மாடுகள் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை விற்பனையானது. மேலும், ஆனால் சாரல் மழை பெய்தால் வெளியூரில் இருந்து வருகின்ற விவசாயிகளும் வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் சுமார் 2.5 கோடி அளவிற்கு, மாடுகள் ரூ.2 கோடிக்கும் மேல் விற்பனையானது. காலை ஐந்து மணி முதல் நடைபெற்ற இந்த சந்தையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 5 கோடி அளவிற்கு விற்பனை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு விலை அதிகரித்து விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்த இந்த நிலையில் விலை குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காட்டிலும் இந்த ஆண்டு கால்நடைகள் விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion