மேலும் அறிய

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகளுக்கு தொடரும் தடை

மழைநீர் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் வருவது இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,35,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைநீர் வினாடிக்கு 1 இலட்சம் கன அடி வருகிறது.
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் இரண்டும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் நீர் திறப்பு என்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
 
கடந்த ஒரு வார காலமாக தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து வினாடிக்கு பத்தாயிரம் கன அடியிலிருந்து 15,000,  17,000, 50,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 34,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 88,000 மற்றும் 1,08.000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,35,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகளை மூழ்கடித்துள்ளது.

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகளுக்கு தொடரும் தடை
இதில் கர்நாடக  அணைகளிலிருந்து வினாடிக்கு 34, 000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், தற்போது வினாடிக்கு 1 இலட்சம் கன அடி தண்ணீர் மழைநீரே வந்து கொண்டிருக்கிறது. மேலும் மழைநீர் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் வருவது இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, தொடர்ந்து 50-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி ஆற்றங்கரை உள்ள பகுதிகளில் ஆற்றில் குளிக்கவும், இறங்குவும் வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget