மேலும் அறிய

மீண்டும் அதிகரித்தது நீர்வரத்து, ஒகேனக்கல் பரிசலுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம்

காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால், பரிசீலிக்க மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால், பரிசலுக்கு மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
 
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுவதுமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடந்த இரண்டு மாதமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் பாறைகள், அருவிகள், தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்தது.
 
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மலை படிப்படியாக குறைந்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு நீர்த்திறப்பு என்பது வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடியாக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் நேற்று காலை காவிரி ஆற்றில் தமிழக எல்லை பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்த  நீர்வரத்து, மாலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மீண்டும் ஒகேனக்கல்லில் பாறைகளில் மற்றும் அருவிகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நீர்வரத்து குறைவால் நேற்று பரிசலை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரிப்பால் மீண்டும் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 
 

மீண்டும் அதிகரித்தது நீர்வரத்து, ஒகேனக்கல் பரிசலுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம்
 
மேலும், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மாத காலத்திற்குப் பிறகு நேற்று பரிசல் இயக்க அனுமதி அளித்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பால், இன்று பரிசிலை மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஒகேனக்கல்லில் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
Embed widget