மேலும் அறிய
தருமபுரி: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை!
டெல்லியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.
![தருமபுரி: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை! dharmapuri: Body of soldier who died due to ill health in Delhi cremated with 21 rounds of military honors TNN தருமபுரி: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/9d6bc89387d5ac2ec95d7cbb53cb18ad1672039099895501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி பஞ்சாயத்து சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 36 என்பவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக டில்லி அருகே பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக பணிபுரிந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருடைய உடல் நேற்று மதியம் அவருடைய சொந்த ஊரான சங்கனம்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார் சுகுமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆர்.ஐ மணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ராஜ்குமார் இராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த ராஜ்குமாருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
![தருமபுரி: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/908ae619611f613ac8f2d8e326ba38431672038842895501_original.jpg)
அரூர் மேல் பாட்ஷாபேட்டையில் சக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஐம்பொன், ஸ்ரீ பாலா குரு ஐயப்பன் 19ஆம் ஆண்டு விழாவையொட்டி யானையில் அமர்ந்து ஐயப்பன் ஊர்வலம்-பொதுமக்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பாட்ஷாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் மாலை அணிந்து, 48 நாள் விரதம் இருந்து டிசம்பர் 28ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட உள்ளனர். தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிலையில் அரூர் பாட்ஷாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ ஐம்பொன் ஸ்ரீ பாலகுரு ஐயப்பனின் 19ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை 7 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, வருனாய் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஏகாதச ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.
![தருமபுரி: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/74f6c70e84a13c1fd00f559e079013df1672038900832501_original.jpg)
இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்கள் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை லட்சுமிக்கு கஜ பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் சுவாமி யானை மேல் வைத்து ஊர்வலமாக மேளதாளமுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அப்பொழுது வழிநெடுகளும் உள்ள பொதுமக்கள் யானைக்கு வாழைப்பழம், கொடுத்து தொட்டு வணங்கினர். மேலும் யானையின் துதிக்கையால் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். அரூர் நகர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய ஊர்வலத்தில் யானை மீது ஐயப்பன் வீதி உலா வந்தது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் வழி நெடுங்கிலும், பொதுமக்கள் யானையை கண்டு வணங்கியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். இந்த நிகழ்ச்சியில் குருசாமிகள் சின்னராஜ், தம்பிதுரை, சுரேஷ் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion