மேலும் அறிய
Advertisement
ABP நாடு செய்தி எதிரொலி - தருமபுரியில் போடப்பட்ட தரமற்ற சாலையை மீண்டும் அமைக்க ஆட்சியர் உத்தரவு
தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மரு.வைத்தியாநாதனை இந்த தார்சாலை தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை மீண்டும் அமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்திரவிட்டார்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டமங்கலம் ஊராட்சி பி.கே.பள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ராஜிகொட்டாய் முதல் கண்ணர் கரை வரை ரூ.11.65 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து சாலை அமைப்பதற்காக முன்பிருந்த தார் சாலையை ஜேசிபி எந்திரம் வைத்து சாலையை பெயர்த்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து புதிய தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் அமைக்கப்பட்டது. மேலும் இரண்டு தளம் அமைக்கப்படும் நிலையில், இந்த சாலையில் ஒரு தளம்(சிப்ஸ்) மட்டுமே தார்சாலையை அமைத்து உள்ளனர். அப்போது கிராம மக்கள் இரண்டு தளம் போடாமல் ஒரே தளத்தில் தார்சாலை அமைக்கப்படுவதால் தரம் இல்லை எனக்கூறி ஒப்பந்ததாரரை வேலை செய்ய வேண்டாம் என தடுத்து நிறுத்தினர். அப்பொழுது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், நான் ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் 2% கமிஷன் தருகிறேன். எதுவும் செய்ய முடியாது என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தார் சாலை அமைத்து இரண்டு நாட்களிலேயே ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து வந்தது. இந்த தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படடுள்ளது என புகார் தெரிவித்தும் அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் தரமற்ற முறையில் உள்ள தார் சாலையை கையில் பெருக்கி அள்ளி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து தரமற்ற தார்சாலை குறித்து, ஏபிபி நாடு இணையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதனை அறிந்த தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மரு.வைத்தியாநாதனை இந்த தார்சாலை தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை மீண்டும் அமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் இரா.வைத்தியநாதன் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்தார். ஏற்கனவே தரமற்ற சாலை அமைக்கப்பட்டது என புகார் எழுந்ததால், மீண்டும் போடப்பட்ட சாலையை அரசு விதிகளின் படி, மூன்று தளங்களோடு தரமாக அமைக்கப்பட்டுள்ளதாக என, தார் சாலையை வெட்டி எடுத்து, ஸ்கேல் வைத்து அளவெடுத்து பார்த்தார். தொடர்ந்து தரமற்ற சாலையை மீண்டும் புதியதாக அணைக்கப்பட்டதால், கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion