மேலும் அறிய
Advertisement
தருமபுரி: தமாணிகோம்பை மலை கிராமத்திற்கு ஒக்கேனேக்கல் கூட்டு குடிநீர் முறையாக வரவில்லை என புகார்
’’தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகள் கூட ஓட்டுக்காக மட்டுமே இந்த கிராமத்திற்கு வருகின்றனர்’’
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கடத்தூர், பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 10 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் ரங்கமாபேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, பஜார் தெரு, தமானிகோம்பை உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. ஒரு பேரூராட்சியில் மலை கிராமம், மலைவாழ் இருப்பது பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிதான். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தமாணிகோம்பை கிராமம், மலை அடிவாரத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். போதிய படிப்பறிவே இல்லாமல், அன்றாடம் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. கிராம மக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை மட்டுமே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அன்றாடம் தேவைகளுக்காக ஊரில் உள்ள இரண்டு விசை பம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு அடி பம்பில் நீண்ட நேரம் அடித்த பிறகு தான் தண்ணீர் வர தொடங்குகிறது. இதனால் குடிநீருக்கு இந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் துணி துவைப்பதற்கு போதிய தண்ணீர் இல்லாததால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை எனக்கூறி விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் கிராம மக்களை அனுமதிப்பதில்லை என புகார் கூறப்படுகிறது.
அதேபோல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி ஒரு தெருவில் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் மற்ற தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கான வசதி இல்லை. மலை அடிவாரத்தில் இருப்பதால் மழைக் காலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கிராமத்தின் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்பொழுது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் செல்லுகின்ற நிலை தற்போது தொடர்ந்து வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடு கழுவுதல், துணி துவைத்தல், பாத்திரம் தேய்த்தல் போன்ற வீட்டில் பயன்படுத்தப்படும் கழிவுநீர், அருகில் உள்ள வீடுகளுக்கு சென்றால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த கிராம மக்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீரை ஒரு பாத்திரத்தில் தேக்கி வைத்து, ஊருக்கு வெளியே எடுத்து கொண்டு போய் ஊற்றும் நிலை இருந்து வருகிறது. மேலும் ஒரு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு முழுமையாக இல்லாததால் அந்தப் பகுதியில் வெளியேறுகின்ற தண்ணீர் கிராமத்தின் நுழைவாயில் தேங்கி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது.
இதுகுறித்து பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் புகார் அளிக்கின்ற நேரங்களில் மற்றும் வருவதாகவும், வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இதற்கு நிரந்தரமாக தீர்வு செய்து தரவில்லை. மேலும் மலை கிராமம் என்பதாலும், மலைவாழ் மக்கள் என்பதாலும், இந்த கிராமத்தின் மீது பேரூராட்சி நிர்வாகத்தினர் அக்கறை செலுத்துவதில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகள் கூட ஓட்டுக்காக மட்டுமே இந்த கிராமத்திற்கு வருகின்றனர். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும், அனைத்து வசதிகளும் செய்து தருவதாகக் கூறி வாக்குகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு யாரும் இதுவரை திரும்பி பார்த்தது இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த போதிலும் கிராமப் பகுதிகள் கூட நவீனமயமாக்கல் நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் ஒரு பேரூராட்சி பகுதியில் உள்ள கிராமம், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. தமிழகத்திலேயே பேரூராட்சி பகுதிகளில் உள்ள மலை கிராமமும், அடிப்படை வசதிகள் கூட இல்லாதது இதுவே ஆகும். ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத மலையில் உள்ள, மலை கிராமங்குக்கு கூட அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நகர் பகுதியை ஒட்டியுள்ள, பேரூராட்சியில் உள்ள மலை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் மலைகிராம மக்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது என மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள தமாணிகோம்பை மலை கிராமத்திற்கு போதிய கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும், தினமும் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion