மேலும் அறிய
Advertisement
தருமபுரி: மின்சார நிறுவனத்தில் 2 யானைகள் அட்டகாசம் - வனப்பகுதியில் விரட்ட வனத்துறை தீவிரம்
தருமபுரி அருகே மத்திய மின்சார நிறுவனத்தில் இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து அட்டகாசம் இரண்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை தீவிரம்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. இதில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது. இந்நிலையில் இன்று விடிய காலை ஏழு மணிக்கு கோணங்கிஅள்ளி, சின்ன பங்குநத்தம், கவுண்டன்கொட்டாய், கூலி கொட்டாய், ஆகிய கிராமங்கள் வழியாக சென்று, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஏரியில் நுழைந்து தண்ணீரில் குளித்து, குதூகலமாக இருந்தது. இதனை தொடர்ந்து சோம்பட்டி கிராமத்தில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவு அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்துள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி செய்யும் இடத்தில் உள்ள தடுப்பு சுவர்களை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இங்குள்ள பவர் கிரேட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இங்கிருந்து பகிர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை இரண்டு யானைகளும் உள்ளே நுழைந்ததால், அச்சமடைந்து தருமபுரி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த வனத் துறையினர், தற்போது அங்கேயே முகாமிட்டு, யானைகளை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து யானைகள் மீண்டும் இரவு நேரங்களில் வெளியில் வரும் போது யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின் உற்பத்தி செய்யும் இடம் என்பதால், யானைகளுக்கும் ஆபத்து, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. மேலும் பென்னாகரம் பகுதியில் நல்ல மழை பெய்து, நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி இருப்பதால், இந்த யானைகள் விவசாய நிலங்களில் சுற்றி திரித்தும், அருகில் உள்ள ஏரி, குளங்களில் சென்று, தண்ணீர் குடித்தும், குளித்து குதூகலமாக இருந்து வருகிறது. இதனால் யானைகள் காட்டை விட்டு கிராமப் புறங்களுக்கு வருவதை நிரந்தரமாக தடுக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பென்னாகரம் பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் கடந்த நான்கு நாட்களாக சுற்றி திரியும் இரண்டு யானைகளால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion