மேலும் அறிய
Advertisement
ஆன்லைனில் திருடப்பட்ட 18,000 பணம் - 48 மணி நேரத்தில் மீட்ட தருமபுரி சைபர் க்ரைம் போலீசார்
புகார் அளித்த 48 மணி நேரத்தில் பணத்தை இழந்தவருக்கு சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுக் கொடுத்தால், காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், தொடர்ந்து இவரது வங்கி கணக்கில் இருந்து, கார்த்திக் தெரியாமலே 2000 வேறு கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதை அறிந்த கார்த்திக் வாடிக்கையாளர் புகார் எண்ணை தேடியுள்ளார். அப்பொழுது கிடைத்த தவறான சேவை எண்ணை அழைத்துள்ளார். அதில் அவர் மொபைலில் ஆண்டி டிஸ்க் ஆப் இன்ஸ்டால் செய்ய கூறியுள்ளனர். அப்பொழுது ஆப்பை டவுன் செய்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், கார்த்திக் வங்கி கணக்கில் இருந்து, மீண்டும் ரூ.18 ஆயிரம் பணம் காணாமல் போயுள்ளது.
இதனை அடுத்து கார்த்திக் சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். இந்த புகாரினை பதிவு செய்த காவல் துறையினர் பணம் மோசடி செய்தவர் குறித்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து புகார் பதிவு செய்த 48 மணி நேரத்தில் ரூ.18,000 பணத்தை, சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டனர். இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பி புஷ்பராஜ், கார்த்திக்கிடம் அவரது ரூ.18,000 ஒப்படைத்தார். மேலும் இதுபோன்ற பணமோசடி புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி என்னை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என ஏடிஎஸ்பி தெரிவித்தார். மேலும் நேரில் வர முடியாதவர்கள் இணையதளம் வழியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம் என தெரிவித்தார். தொடர்ந்து புகார் அளித்த 48 மணி நேரத்தில் பணத்தை இழந்தவருக்கு சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுக் கொடுத்தால், காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புத்துணர்ச்சி பெறுகிறதா தெருக்கூத்து? - அரசு பள்ளியில் அசத்திய மாணவன்
தமிழகத்தில் முன்பெல்லாம் கோவில் திருவிழா உட்பட பல்வேறு இந்நிகழ்ச்சிகளில் தெருக்கூத்து கட்டாயமாக இடம்பெற்று வந்தது. இதன் மூலம் மகாபாரதம், இராமாயணம், உள்ளிட்ட பல்வேறு புராணங்களை பொது மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் எடுத்துரைத்து வந்தனர். நாளடைவில் ஆர்கெஸ்ட்ரா என்ற இசை நிகழ்ச்சி வளரத் தொடங்கியதால் தெருக்கூத்துக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடைபெறாமல் பல்வேறு இன்னலுக்கு இன்று வரை ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அதிகாரப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற தெருக்கூத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் தினேஷ் (17) என்பவர் அர்ஜுன தவசு என்ற தெருக்கூத்த்தில் அர்ஜுனன் வேஷமிட்டு மகாபாரதத்தை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நினைவு படுத்தும் வகையில் வசனம் பேசி நடித்து அசத்தியது தெருக்கூத்து எந்தக் காலத்திலும் அழியாமல் உள்ளது.என்று அந்த மாணவனை பாராட்டிய தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion