மேலும் அறிய
ரயில்வே துறையின் பாதுகாப்பை மத்திய உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி தான், ஆனால் சிறுதானியத்தை கர்நாடகவில் வாங்குவது சரியில்லை.
![ரயில்வே துறையின் பாதுகாப்பை மத்திய உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் Central govt should ensure safety of railway sector says Anbumani ramadoss TNN ரயில்வே துறையின் பாதுகாப்பை மத்திய உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/8b69239442cf87c48f486d11c9c42b5c1685959819978113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அன்புமணி ராமதாஸ்
ரயில்வே துறையின் பாதுகாப்பை மத்திய உறுதி செய்ய வேண்டும் என்றும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்ட அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெறும், டாக்டர் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியினை தொடங்கி வைத்து முதலிடம் பெரும் அணிக்கு இரண்டு லட்சம் பரிசு தொகையும், கோப்பையில் வழங்கினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ”கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்கள் திசை மாறி போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதேப்போல் மற்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால், நீராதாரம் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும். வெளியூர் வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற பல போராட்டம் நடத்தடப்பட்டது. இதனை நிறைவேற்றப்படும் என உறுதிக் கூட முதலமைச்சர் சொல்லவில்லை. இதனை அரசியலாக பார்க்கிறாரா என தெரியவில்லை.
தாம்பரம் பகுதியில் 77 மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடைபெறாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். இதை கலைஞர் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான் மின் கட்டணம் உயர்த்தியது. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தவுள்ளது. அவ்வாறு மின் கட்டணம் உயர்த்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை பாமக எதிர்த்து போராடும். மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்ப கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு மேட்டூர் அணை ஒன்று தான் உள்ளது. இந்த அணை கட்டுவதே தடுத்து நிறுத்தனும். தமிழ்நாடு அதே எதிர்க்கனும். மேலும் மத்திய அரசு இந்த அணைக்கட்ட அனுமதிக்க கூடாது.
தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி தான், ஆனால் சிறுதானியத்தை கர்நாடகவில் வாங்குவது சரியில்லை. கடந்த காலங்களில் பட்டுப்பூச்சி கூட கர்நாடகவில் தரமாக இருப்பதாக கூறினார்கள் ஆனால் தருமபுரியில் கிடைப்பதுதான், தரமாக இருந்தது. இதெல்லாம் பணத்திற்காக, கமிஷனுக்கு வாங்குகிறார்கள். இந்தியா முழுவதும், 40 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேப் 170 மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மோடி அனுமதிக்க கூடாது. இந்தியாவிற்கு இன்னும் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவை இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள வரை நியமிக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்றவர்களால் திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயர் தான். ஆட்டோமேட்டிக் மிசினை செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார். திமுக கட்சியின் நிறுவனரின் கொள்கைப்படி இயங்க வேண்டும். ஒடிஷா ரயில் விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுப் போன்ற விபத்தினால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்லட் ரயில் கொண்டு வருவதை விட, பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நுட்பத்தினை கொண்டு வரவேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு ரயிலாக திட்டங்களுக்கு 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion