மேலும் அறிய
Advertisement
சொத்துக் குவிப்பு வழக்கு: குடும்பத்தினர் 11 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர்!
டிசம்பர் 8-ம் தேதி 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அப்பொழுது அவர்களுக்கு இந்த வழக்கு குற்ற பத்திரிக்கை வழங்கப்பட உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக, தருமபுரி நீதிமன்றத்தில் இன்று குடும்பத்துடன் ஆஜரானார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 வரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கே.பி.அன்பழகன் ஒரு லிட்டர் தொடர்புடைய 54 இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் இலஞ்ச ஒழிப்பு துறையினர், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பற்றினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.45.20 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 22-ம் தேதி போலீஸார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேதியாக ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர், தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்காக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் தொடர்புடைய அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட பதினொரு பேரும் விசாரணைக்காக நீதி மன்றத்தில் ஆஜரானர். இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை வருகிற டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 8-ம் தேதி 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அப்பொழுது அவர்களுக்கு இந்த வழக்கு குற்ற பத்திரிக்கை வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion