மேலும் அறிய
Advertisement
வைரஸ் நோய் தாக்குதல்...கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை - விரக்தியில் தக்காளி செடிகளை அழித்த விவசாயி
விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி: தக்காளி செடியில் வைரஸ் நோய் தாக்குதலால் டிராக்டரை வைத்து உழுத விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு வேளாண் துறை மூலம் விதை விற்பனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு உள்ள தக்காளி மார்கொட்டிலிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை , மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தற்போது பல தனியார் நிறுவனங்கள் தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்வதால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று 1.50 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்யப்பட்டு இருந்த நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமனஹ்ள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓர் ஏக்கர் விளைவிக்க 1 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக்கும் நிலையில் கிலோ தக்காளி 10 ரூபாய் வரை விற்பனை செய்வதால் விரக்தியில் பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion