மேலும் அறிய
Advertisement
தருமபுரி : அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொியாா், அண்ணா, அம்பேத்கா், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்
தருமபுரி மாவட்டத்தில் அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
கடந்த 21ம் தேதி தேதி தருமபுரி மாவட்ட அதிமுக அமைப்பு தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் மாவட்ட செயலாளருக்கு முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கே.பி.அன்பழகன் விருப்பமனு வழங்கினார். .அதனையடுத்து மாவட்ட செயலாளராக மீண்டும் அவரையே கட்சி தலைமை அறிவித்தது. மேலும் ஒன்றிய, நகர நிர்வாகிகளும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தருமபுாி மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வந்த கே.பி.அன்பழகனுக்கு, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொியாா், அண்ணா, அம்பேத்கா், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் 65வது பிறந்தநாளையொட்டி, கட்சி தொண்டர்கள் கேக் வெட்டியும் கொண்டாடினாா். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினா்கள் ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், நகர செயலாளா் பூக்கடை ரவி மற்றும் புதிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி பாரதிபுரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட விவசாய பொருட்கள் விற்பனை கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் புதிய நவீன எந்திரங்கள், பால் பீய்ச்சும் இயந்திரம், மருந்து தெளிப்பான்கள் போன்றவை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இந்த கண்காட்சியில் கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு அரங்குகள் அமைத்து எந்திரங்களை பார்வைக்கு வைத்துள்ளனர். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் விவசாய கண்காட்சியில் பங்கு பெற்று புதிய தொழில்நுட்பங்களை அறிந்து செல்கின்றனர். மேலும் அதிகமான விவசாயிகள் இயற்கையாக விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வுக்காக காய்கறி மற்றும் கீரைகள், நெல் போன்ற நாட்டு விதைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை அதிக அளவில் அரங்குகள் அமைத்து விற்பனை செய்து வருகிறன்றனா். இந்த கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும்பாலும் இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரங்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, தருமபுரியில் விவசாய கண்காட்சி நடைபெறாததால், தற்போது நடைபெறும் இந்த கண்காட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion