மேலும் அறிய
Advertisement
தருமபுாி அருகே லாரிகள் மோதல்; 5 மாடுகள், ஒருவர் உயிரிழந்த சோகம்
தருமபுரி அடுத்த தொப்பூா் கணவாய் பகுதியில் இரண்டு லாாிகள் நேருக்கு நேர் மோதி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 மாடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தருமபுரி அடுத்த தொப்பூா் கணவாய் பகுதியில் இரண்டு லாாிகள் நேருக்கு நேர் மோதி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 மாடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தருமபுாி மாவட்டம் தொப்பூா் கணவாய் பகுதியில் நேற்று காலை லாாியும் சுற்றுலா பேருந்தும் மோதிய விபத்தில் 18 போ் காயம் அடைந்தனா். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினா் மற்றும் காவல் துறையினா் பேருந்து லாாிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இதனால் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு போக்கவரத்தை சாி செய்ய ஒருவழி சாலையில் திருப்பி விடடனா். இந்நிலையில் மாலை 4 மணியளவில் கா்நாடக மாநிலத்திலிருந்து சேலத்திற்கு கொண்டை கடலை ஏற்றி சென்ற லாாி கணவாய் பகுதியில் வந்த பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி எதிர்முனையில் ஈரோடுலிருந்து மத்தூருக்கு மாடுகளை ஏற்றிகொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது.
அப்பொழுது மாடு ஏற்றி வந்த லாரி சேலம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சார்ந்த செல்வராஜ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இந்த விபத்தில் லாரி நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் ஐந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் லாரியில் இருந்த கொண்டைக் கடலை மூட்டைகள் முழுவதும் சாலையில் சரிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் துறையினர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த லாரி ஓட்டுனர்கள் ஜெகன், இளவரசன் மற்றும் மாடு ஏற்றி வந்த விவசாயிகள் ரவி, மேகநாதன் ஆகிய நான்கு பேரையும், மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கிரேன், ஜேசிபி இயந்திரங்களின் மூலம் விபத்தில் சிக்கிய லாரிகள் மற்றும் உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தொப்பூர் கணவாயில் உள்ள இரட்டை பாலம் அருகே நடைபெற்ற விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழி பாதையாக இருந்த நிலையில் மாலை மீண்டும் அதே பகுதியில் விபத்து நடைபெற்ற சம்பவத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இந்த பகுதியில் விபத்து நடைபெறுவதை தடுக்க நிரந்தரமாக ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion