Vijay Vs Seeman: வரும் தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியா.? சீமானின் பதில் என்ன தெரியுமா.?
விஜய் தனது தம்பி என்றும், அவர் மேல் இருக்கும் அக்கறையில் தான் அவரது கருத்துக்களை எதிர்த்து வருவதாகவும் கூறியுள்ள சீமான், தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் தனது தம்பி என குறிப்பிட்டுள்ள அவர், அக்கறையின் காரணமாகவே அவரது கருத்துக்களை எதிர்த்து பேசிவருவதாக தெரிவித்தார். மேலும், தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். அது என்ன.? பார்க்கலாம்.
பாஜக கொள்ளை எதிரி என்றால், திமுகவின் கொள்கைகளில் உடன்பாடா.?
சீமான் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், அவரிடம் விஜய் குறித்து மட்டும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் பதிலளித்த அவர், தவெகவினரை நாம் தமிழர் கட்சியினர் அதிகமாக விமர்சனம் செய்வதாக கூறப்படுவதற்கு, அதையெல்லாம் ரசித்து சிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விமர்சனத்தை தாங்க முடியாமலா இந்த இத்தில் வந்து நிற்கிறோம் என கேள்வி எழுப்பிய அவர், சிறு பிள்ளைகள் முதலில் பக்குவப்பட வேண்டும், கருத்தை கருத்தார் மோதத் தெரியவில்லை என்று விமர்சித்தார்.
அதோடு, பாஜக தனது கொள்கை எதிரி, திமுக தனது அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார்.. அப்படியானால், திமுகவின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடா என கேள்வி எழுப்பினார் சீமான்.
மேலும், பாஜக கொள்கை எதிரி என்றால், காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா என்ற கேள்வி வருகிறது என கூறிய அவர், பாஜக கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள் என கேட்டார்.
“பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் ஒரே கொள்கைதான் - அதே தான் அதிமுக, திமுக“
தொடர்ந்து, பாஜகவும், காங்கிரசும் ஒரே கொள்கைதான் என கூறிய சீமான், கட்சியின் பெயர் தான் வேறு, கொடியில் வண்ணம் மாறும், கொள்கையில் எண்ணம் மாறாது. அதே தான் அதிமுக, திமுகவிற்கும் என விளக்கினார்.
மேலும், பிரசாரத்தில் பேசும்போது, சாதி, மொழி, இனம் என பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுவதாக சுட்டிக்காட்டிய அவர், மொழி, இனம் என்று பேசும்போதே, அடிப்படை அரசியல் தெரியவில்லை என்று வந்துவிடுவதாக விமர்சித்தார்.
அண்ணனாக கேள்வி கேட்பேன்
“என் குறுக்கே தாவி ஓடிக்கொண்டு இருந்தால், அண்ணனாக கேள்வி கேட்பேன், திமுகவை ஒழிக்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். அப்படியானால், முதலில் காங்கிரஸை தான் ஒழிக்க வேண்டும். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மன்னரட்சியைத் தொடர்ந்து செய்து வருவது காங்கிரஸ் தான், அவர்களை பற்றி ஏன் பேசவில்லை என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பினார்.
விஜய்யை எதிர்த்து தேர்தலில் போட்டியா.?
விஜய்யை எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைப்பதால், அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது என கொந்தளித்தார். மேலும், அவரை எதிர்ப்பதற்கா வேலை செய்து வருகிறேன் என கேட்ட அவர், அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள், எங்களுக்குள் கருத்து முரண் இருக்கிறது, அதை சரி செய்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம் என தெரிவித்தார்.
விஜய் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருவதாகவும், “அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சை ஒருமுறை கேளு..“ உனக்கு எழுதிக்கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்வதாகவும், அது விஜய்க்கு புரியவில்லை என்றும் சீமான் கூறினார்.






















