மேலும் அறிய

EPS About TVK Vijay: "அதிமுகவை பற்றி விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள்" -இபிஎஸ்.

அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதால் தான், அதிமுகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. "அதிமுக குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை. அதிமுக மக்களுக்காக தொடங்கி, தொடர்ந்து மக்களுக்காக உழைக்கிற கட்சியாக உள்ளது. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார் ? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை முன்னிறுத்தியே அதன் தலைவர்கள் பேசுவார்கள். இதற்காக மற்றவர்கள் மற்றவர்கள் ஆதங்கப்படக்கூடாது.

EPS About TVK Vijay:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கு சேவை செய்பவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். அதிமுக 50 ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக அதிமுக திகழ்கிறது.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள் தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை திமுக கூட்டணியில் பிளவு இருப்பதாகவே மக்கள் பேசி கொள்கிறார்கள் என்றார்.

EPS About TVK Vijay:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே பட்டியலின மக்களின் வீடுகள் தாக்கப்பட்டதை தொலைக்காட்சியில் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் இதிலிருந்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கும், பட்டியலின மக்களின் மீதான தாக்குதலும் எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுபடுபவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது" என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
விடுமுறைக்கு பின் கூடும் சட்டசபை... 2 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget