மேலும் அறிய

Leema Rose vs EPS : என் மேல நடவடிக்கையா.!? அப்போ வாங்குனதை திருப்பி கொடுங்க- இபிஎஸ்யை கதற விடும் லீமா ரோஸ்

Leema rose ADMK : அதிமுகவின் கட்சி பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் என முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்த நீக்கப்பட்ட நிலையில், லீமா ரோஸ் மட்டும் நீக்கப்படாததற்கு ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெறமுடியாமல் தவெக தவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்து தவெகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. அடுத்ததாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது தவெக.

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்

இதற்கிடையே தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவின் ஒரு பிரிவினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக அதிமுவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ், கே.பி.அன்பழகன், வீரமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்களும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டனர். அடுத்தாக தமிழக சட்டமன்றத்தில் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அதிமுகவினர், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதே போல எஸ்.பி.வேலுமணி அணி விஜயபாஸ்கரை கொறடாவாக நியமிக்க கடிதம் கொடுத்தது. ஆனால் தற்போது வரை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

அதிமுக மாஜிக்கள் கட்சி பதவியில் இருந்து நீக்கம்

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அதிரடியாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் என ஒட்டுமொத்தமாக 27 மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் எஸ்.பி.வேலுமணியின் அணியில் உள்ள லால்குடி தொகுதியின் எம்எல்ஏவான லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த வகையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அங்கிருந்து விலகி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் அதிமுக மகளிர் அணி இணைச்செயலளார் பொறுப்பானது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் லால்குடி தொகுதி வேட்பாளராக லீமா ரோஸ் பெயர் இடம்பிடித்தது. லீமா ரோஸ் அசூர வளர்ச்சியானது அதிமுகவில் மட்டுமில்ல அரசியல் வட்டாரமே திரும்பிபார்க்கவைத்தது.

”வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க சொல்லுங்க”

இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் லீமா ரோஸ் முக்கிய பாங்காற்றி வருகிறார். அந்த வகையில் மூத்த நிர்வாகிகளின் பொறுப்புகளை அடுத்தடுத்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் பதவியை நீக்காததற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், லீமா ரோஸ் மட்டும் தப்பித்து விட்டார் என நகைச்சுவையாக பேசியுள்ளனர். அதற்கு லீமா ரோஸ் அதிமுகவில் இணைய பெறப்பட்ட பணத்தையும், கட்சி பதவி வழங்க கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகி வருகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Embed widget