தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல்

Published by: கு. அஜ்மல்கான்

சோயா பால், டோஃபு (Soya Paneer), மற்றும் சோயா சங்ஸ் (Soya Chunks) போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் தைராய்டு ஹார்மோன் உறிஞ்சுதலில் பாதிப்பு ஏற்படலாம்.

முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பிரக்கோலி போன்றவற்றை உட்கொண்டால், அயோடின் உட்கொள்ளும் அளவு பாதிக்கப்படலாம்.
இருப்பினும், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

பர்கர்கள், பிட்சாக்கள், வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள், அதிக உப்பு இருக்கும். இவை எடை அதிகரிப்பை ஏற்படுத்துவதோடு, தைராய்டு பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும்.

சர்க்கரை அதிகம் உள்ள இனிப்புகள், குளிர்பானங்கள், கேக்குகள் போன்றவற்றை தவிர்க்கவும். தைராய்டு காரணமாக வளர்சிதை மாற்றம் மெதுவாகும்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிற்றுண்டிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உடனடி உணவுகளில் சோடியம் அதிகமாக உள்ளது. இவை ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம்.

அதிகமாக காபி குடித்தால் தைராய்டு மருந்துகளின் தாக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருந்துகள் உட்கொண்ட உடனேயே காபி குடிக்கக் கூடாது.

மது அருந்துவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கலாம். ஹார்மோன் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிப்ஸ் பாப்கார்ன் மற்றும் பொட்டல உணவுகளில் உப்பு அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்துடன் தைராய்டு பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும்.

சிலரில், க்ளூட்டன் உள்ள உணவு தைராய்டு ஆட்டோஇம்யூன் பிரச்சனைகளைத் தூண்டலாம்.

డీப் ஃப்ரைடு உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். இவை ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் வாய்ப்புள்ளது.

தைராய்டு உள்ளவர்கள் சரியான உணவு, உடற்பயிற்சி, சரியான நேரத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.