மேலும் அறிய

'ஈரான் மக்கள் போராட்டத்தில் நடப்பதென்ன?' சமூகவலைதளங்களில் துவங்கிய எதிர்ப்பு போராட்டம்!

முதலில் பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தலைமுடியை அறுத்து எதிர்ப்பினை பதிவு செய்யத் துவங்கினார்கள். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்

நெருப்பின் சிறு பொறி மொத்த காட்டையே அழித்து சாம்பலாக்கும் வல்லமை கொண்டவை. அப்படியான ஒரு பொறியாகவே பார்க்கப்படுகிறது ஈரானில் இன்று அந்நாட்டின் அரசுக்கெதிராக நடைபெற்று வரும் போராட்டம். பர்க்கா சரியாக அணியாத குற்றத்திற்காக மராலிட்டி காவலர்களால் ( Morality police ) கைது செய்யப்பட்டு விசாரணையின் போதே உயிரிழந்தார் 22 வயதான மாஃஷா அமினி. அதன் தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக மராலிட்டி காவலர்களின் செயலினையும் அவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் கண்டிக்கும் விதமாக போரட்டங்கள் நடைபெறத் துவங்கின. ஈரானின் வரலாற்றிலேயே பெண்களால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் மாபெரும் போராட்டமிது.

உயிரழந்த மாஃஷா அமினி, புகைப்படம் நன்றி _ Wikipedia
உயிரழந்த மாஃஷா அமினி, புகைப்படம் நன்றி _ Wikipedia

சமூகவலைதளங்களில் துவங்கிய எதிர்ப்பு போராட்டம்

முதலில் பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தலைமுடியை அறுத்து எதிர்ப்பினை பதிவு செய்யத் துவங்கினார்கள். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தங்கள் தலைமுடியினை அறுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதின் மூலமாக மாஃஷா அமினி-யின் மரணத்தினை உலகறியச் செய்ததோடு, மராலிட்டி காவல்துறையினரின் அத்துமீறல்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினர். ஆரம்ப நிலையியே, மாஃஷா அமினியின் மரணம் காவல்துறையால் நிகழவில்லையென்றும் அவர் காவல்நிலையத்தில் தாக்கப்படவே இல்லையென்றும் அவரது இறப்பிற்கு காரணம், கைதுக்கு முன்பிருந்த உடல்நலக் கோளாறே என ஈரான் அரசு நிர்வாகம் மறுத்தது.

சுப்ரீம் லீடர் கமேனி , புகைப்படம் Courtesy : Courtesy _ Wikipedia
சுப்ரீம் லீடர் கமேனி , புகைப்படம் Courtesy : Courtesy _ Wikipedia

மக்கள் போராட்டம்

முதலில் மாஃஷா அமினியின் நகரமான சாகேஸ்-ல் துவங்கிய போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறி நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெறத் துவங்கியது. போராட்டங்கள் ஆரம்பமான போதே ஈரானிய அரசு அந்த போராட்டங்களை கடுமையான முறைகளில் தடுத்ததோடு மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக போராட்டங்கள் ஈரான் முழுமைக்கும் பரவத் தொடங்கியதினை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயல அது வன்முறையாக மாறத் துவங்கியுள்ளது. காவல்துறையினர் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட தடைவிதித்து தீவிரமான கண்காணிப்பிற்கும் உள்ளாக்கி உள்ளனர்.

தீவிரமடையும் போராட்டம், புகைப்படம் - Picture Courtesy : BBC
தீவிரமடையும் போராட்டம், புகைப்படம் - Picture Courtesy : BBC

மாணவர்கள் போராட்டம்

மக்களின் போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து ஈரான் முழுமைக்குமான கல்லூரி மாணவர்களும் பிரபல பல்கலைக் கழக மாணவர்களும் கல்லூரிகளுக்குள்ளும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி போராடத் துவங்கினர். பள்ளிகளில் மாணவிகள் தங்களது தலை மறைப்பினை தூக்கியெறிந்து அரசுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக குரலெழுப்ப துவங்கியுள்ளனர். ஆனால் இத்தகைய போராட்டங்களை தற்போதைய ஈரானிய அரசு கிஞ்சித்தும் அனுமதிக்காததினாலும், போராட்டங்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்த முனைகிறது. ஆனால் இந்த போராட்டம் மாஃஷா அமினியின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் போராட்டம் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக மக்களின் மீது அதிகாரக்கரம் கொண்டும் அத்துமீறல்களையே வாடிக்கையாகக் கொண்டு நிகழ்த்தி வந்ததின் அழுத்தத்தின் வெடிப்பாகவே இந்த மக்கள் போராட்டம் அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டமாக மாறியுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள், புகைப்படம் - Picture via _ arabnews.com
போராட்டக் களத்தில் பெண்கள், புகைப்படம் - Picture via _ arabnews.com

சுப்ரீம் தலைவரின் பேச்சு

ஈரானின் சுப்ரீம் தலைவரான அயதுல்லா அலி கமேனி, மாஃஷா அமினியின் மரணம் ஒரு கசப்பான சம்பவம் எனவும் தன் இதயத்தில் ஆழமான காயத்தினை உண்டாக்கியுள்ளதாகவும் சொல்லும் அவர், மேலும் இந்த போராட்டங்கள் விரும்பத்தகாத நிகழ்வுகள் எனவும் இதனை ஈரானிய மக்கள் தானாக செய்யவில்லை என்றும் இதற்கு முக்கியமான காரணம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலால் அவர்களின் அடிபொடிகளே வன்முறைக்கு காரணம் எனவும் கூறியுள்ளார். 

மாஃஷா அமினி, புகைப்படம் Thanks _ Arabnews
மாஃஷா அமினி, புகைப்படம் Thanks _ Arabnews

இந்நிலையில் இந்த போராட்டங்களை அடக்குமுறையினால் மட்டுப்படுத்த முனையும் அரசு நிர்வாக்கத்தின் போக்கினால் குறைந்தது 100 பேர் வரை இறந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், சிலரது உடல்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக தகவல் குடும்பத்தினருக்கு சொல்லப்பட்டு, அவர்களது அனுமதியின்றி உடல்களை ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. மக்களின் போராட்டத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு சட்ட ரீதியிலான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே ஒரு முடிவினை ஏற்படுத்தும். இல்லையெனில் சில அரபு நாடுகளில் நடந்த மக்கள் புரட்சியின்      ( Arab spring protests ) விளைவாக ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களை போல நிகழ்வதற்கும் வாய்ப்பிருப்பதினை மறுப்பதற்கில்லை. சட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமேயொழிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அதனை தூக்கி எறிய மக்கள் முனைவார்கள் என்பதில் மாற்றில்லை.

  • அ.கார்த்திகேயபாலாஜி

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget