மேலும் அறிய

Sasikala Statement: அதிமுக பொதுச்செயலாளர் பதவியை துறந்தாரா சசிகலா? புதிய அறிக்கையால் பரபரப்பு!

நேற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் என கூறி சசிகலா அறிக்கை விட்டிருந்த நிலையில், இன்று எந்த பெயரும் இன்றி எம்.ஜி.ஆர் நினைவுநாள் உறுதியேற்பு அறிக்கை விட்டிருக்கிறார்.

நேற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் என கூறி சசிகலா அறிக்கை விட்டிருந்த நிலையில், இன்று எந்த பெயரும் இன்றி எம்.ஜி.ஆர் நினைவுநாள் உறுதியேற்பு அறிக்கை விட்டிருக்கிறார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி வந்த சசிகலா தனது பதவியை துறக்க தயாராகி உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதால் காவல்துறையினர் வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Sasikala Statement: அதிமுக பொதுச்செயலாளர் பதவியை துறந்தாரா சசிகலா? புதிய அறிக்கையால் பரபரப்பு!

இதைத்தொடர்ந்து சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 34ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில் அவரின் புகழ் நிலைக்க எப்போதும் பணியாற்றிட வேண்டும் என உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளனர். 

வழக்கமாக சசிகலா தரப்பில் எந்த அறிக்கை வெளியிட்டாலும் “வி.கே.சசிகலா, கழக பொதுச்செயலாளர், அ இ அ திமுக” என தெரிவித்திருப்பார். ஆனால் இப்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது.

நேற்றுவரை சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை வெளியிட்டுவந்த நிலையில் இன்று எந்த தகவலும் இல்லாமல் எம்.ஜி.ஆர் நினைவுநாளில் உறுதி மொழி ஏற்போம் என அறிக்கை வெளிவந்துள்ளது.  

இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி வந்த சசிகலா தனது பதவியை துறக்க தயாராகி உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.  அதேநேரத்தில், அறிக்கையின் உள்ளே கழக பொதுச்செயலாளர் சின்னம்மா என வருவதால் இதை சசிகலா வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது.

சசிகலா ஆதரவாளர்கள் சார்பில் வெளியிட்ட அறிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் தவறுதலாக பெயர் குறிப்பை வெளியிட மறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அவர் தரப்பில் வெளியிடப்பட்டிருந்தாலும் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரது பெயரை குறிப்பிட்டிருக்கலாம். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அதிமுக என்ற வார்த்தையும் அறிக்கையில் இடம்பெறவில்லை. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி.ஆர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், பின்வரும் உறுதிமொழிகளை உளப்பூர்வமாய் ஏற்போமாக.

தமிழகத்தில் உள்ள, ஏழை எளிய மக்களின், வாழ்வில் ஒளியேற்றிட, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, அனைவருடைய இதயங்களிலும், 'நிரந்தரமாய் குடிகொண்டு இருக்கும், பொன்மனச் செய்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் வண்ணம், அவர் கட்டிக்காத்த கொள்கைகளையும், நமக்கு உருவாக்கி தந்த சட்ட திட்ட விதிகளையும், அடிபிறழாமல் கடைபிடித்து கழகத்திற்கு, விசுவாசமிக்க தொண்டர்களாக, துரோகத்தை வீழ்த்தும் வீரர்களாக, புரட்சித் தலைவர் அவர்களின், புகழ் பாடும் கழக உடன்பிறப்புகளாய், பணியாற்றிடவும் இந்நாளில் உறுதியேற்போம்.

நம் 'புரட்சித்தலைவர் அவர்கள், எந்த சூழநிலையில், எந்த நோக்கத்திற்காக, இந்த இயக்கத்தை உருவாக்கினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நினைத்து, அவரது எண்ணம் ஈடேற, அவர் கண்ட கனவு நனவாக, இந்த பொன்விழா ஆண்டில் உறுதி ஏற்போம்.

நம் புரட்சித்தலைவரும், நம் புரட்சித்தலைவியும், கற்று கொடுத்த பாடங்களை, எந்நாளும் மறக்காமல், அதே நெறி முறைகளை பின்பற்றி, தன்னலமின்றி செயலாற்றி, எதிரிகளின் சூழ்ச்சிகளை வேரறுத்து, வென்றிடுவோம் என்று உறுதி ஏற்போம்.

நம் புரட்சித்தலைவரையும், நம் புரட்சித்தலைவியையும், தனது உயிர் மூச்சாக எண்ணி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கும், கோடான கோடி, கழகத் தொண்டர்களின் எண்ணம் ஈடேறவும், கழகம் மீண்டும் தலை நிமிரவும், ஒன்று படுவோம், வென்று காட்டுவோம். தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழகத்தின் ஜீவாதர உரிமைகளை பாதுகாத்திடவும், நாம் அனைவரும், நம் வாழ்நாள் முழுவதையும், அர்பணிப்போம். அயராது உழைப்போம்.

சத்துணவு தந்த, நம் புரட்சித்தலைவரின் சாதனைகளையும், அம்மா உணவகம் தந்த, நம் புரட்சித்தலைவியின் சாதனைகளையும் இவ்வுலகம் உள்ளவரை, அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம், என்று உறுதி ஏற்போம்: வரும் காலங்களில், உள்ளாட்சி மன்றம் முதல், நாடாளுமன்றும் வரை, கழக உடன்பிறப்புக்கள், பல்வேறு பதவிகளில் அமர்ந்து மக்களுக்கு சேவையாற்றி, அரிய வாய்ப்புகளை, அடிமட்ட தொண்டர்களுக்கும் கிடைத்திட நம் கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையின் கழகத்தை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல! ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்.

உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம் புரட்சித்தலைவரின் பாதையில் சென்றிட உறுதி ஏற்போம், உறுதி ஏற்போம். நிரூபிப்போம், நிரூபிப்போம். புட்சித்தலைவரின் வாரிசுகள் நாம் என்ற நிரூபிப்போம், நிரூபிப்போம். வென்று காட்டுவோம், வென்று காட்டுவோம். துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம். வென்று காட்டுவோம். போராடுவோம். போராடுவோம். தமிழர்களின் உரிமைக்காக போராடுவோம், போராடுவோம். உருவாக்குவோம், உருவாக்குவோம். தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்குவோம், உருவாக்குவோம். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! புரட்சித்தலைவி புகழ் ஓங்குக” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget