நண்பராக இருந்தாலும் நாகரிகமாக பேச வேண்டும் - சி.வி.சண்முகத்தை சாடிய அமைச்சர் பொன்முடி
உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்று கூறுவதை சிவி சண்முகம் நிறுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்து விட்டு அப்பறம் எடப்பாடி பழனிசாமி பக்கம் போன சி.வி.சண்முகம் அரசியலை பற்றி பேச தகுதியில்லை என்றும் உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்று கூறுவதை சிவி சண்முகம் நிறுத்தி கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருவாதியில் திமுகவை சார்ந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏற்பாட்டின் பேரில் 300 நபர்களுக்கு அரிசி வேட்டி சேலைகள் வழங்கபட்டன. இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு வழங்கினர்.
அதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது :
அமைச்சராக உள்ள உதயநிதியை என்னுடைய கால்தூசிக்கு சமம் என்று சிவி சண்முகம் கூறியிருக்க கூடாது எனவும் அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டும் என்று பேசகூடாது முதலில் ஓ பன்னீர்செல்வக் பக்கம் இருந்து விட்டு அப்பறம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன இவரெல்லாம் அரசியலை பற்றி பேசதகுதியில்லை என்றும் பெரியார், அண்ணா,கலைஞர், தளபதி வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம் சிவி சண்முகத்திற்கு எச்சரிக்கையாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் திமுகவில் அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும் 10 சதவிகித வாரிசுகள் திமுகவில் அரசியலில் இருப்பதில் தவறில்லை என்றும் உதயநிதியை தனது கால்தூசுக்கு சமம் என்பதை கூறும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதனை நிறுத்தி கொள்ள வேண்டுமென எச்சரிக்கையாக தெரிவிப்பதாக கூறினார்.
சிவி சண்முகத்திற்கு பொன்முடி எச்சரிக்கை:
சி.வி.சண்முகம் தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் நாங்களும் தரங்கெட்டு பேசினால், நீங்க தாங்க மாட்டீங்க. நண்பராக இருந்தாலும் நாகரீகமாக பேச வேண்டும் என்று என்றும் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஊரை ஏமாற்றி விட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அமைந்திருக்கும் சிவி சண்முகம் தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்க தெரியாத நபர் யாரையும் மதிக்க தெரியாத அவருக்கு விரைவில் விழுப்புரம் மாவட்ட திமுக பதில் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லும் என தெரிவித்தார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















