மேலும் அறிய

‛கூட்டணி அமைத்தப் பின் குறைபாடு பற்றி பேசக்கூடாது’ -காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி!

‛‛கூட்டணி என்று வந்தாலே எல்லா கட்சியிலும் விரும்புகிற அளவுக்கு தொகுதிகள் கிடைப்பதில்லை,’’ -கே.எஸ்.அழகிரி.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார்.  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், அகில இந்திய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், மாநில துணைத் தலைவர்கள் குலாம்மொய்தீன், பொன்.கிருஷ்ண மூர்த்தி, அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்ராம், சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கூட்டணி என்று வந்தாலே எல்லா கட்சியிலும் விரும்புகிற அளவுக்கு தொகுதிகள் கிடைப்பதில்லை. குறைபாடு என்பது எல்லோரின் மனதிலும் இருக்கும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதைப்பற்றி பேசக்கூடாது. தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். நாங்கள் எங்கள் கட்சி செயல் வீரர்களின் விருப்பத்தின் பேரில் கொள்கை முடிவோடுதான் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். நாங்கள் மதசார்பின்மை என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

‛கூட்டணி அமைத்தப் பின் குறைபாடு பற்றி பேசக்கூடாது’ -காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி!

காங்கிரஸ் தலைவர்களை உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான நிர்வாகிகளின் நம்பிக்கையை பெற்றவர்கள். சோனியாவை தற்காலிக தலைவர் என கூறுவது அறிவார்ந்த செயல் அல்ல. தற்காலிக செயல் மட்டுமே. மக்கள் மனதில் இடம் பிடிப்பவரே தலைவர்கள். அதுபோல் தான் தற்போது காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளனர்.

அவர்களை தற்காலிக தலைவர் எனக்கூறி அதை பொது வெளியில் கூறுவது பா.ஜ.க.வின் ஆசையை நிறை வேற்றுவதற்காக சொல்வது, அது தவறாகும். தற்காலிக தலைவர் என கூறிய கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்திரா, சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக யார் பேசினாலும் அதை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. அதிகாரத்தில் இருப்பதால் தலைவர்களை மாற்றும்போது எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் அதிகாரத்தில் இல்லாததால் சிறு, சிறு சலசலப்புகள் வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்  ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டம்  ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சரியில்லை என்று பேசுவது சரியல்ல என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி  கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?

EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்

Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை

ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்

INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?

Breaking News LIVE: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு

WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்

Embed widget