மேலும் அறிய

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புமனுதாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியிட விரும்புவோர் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கோலாகலமாக நடந்த வேட்புமனு தாக்கல்:

வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏராளமானோர், ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேச்சைகள் பலரும் பணமாலை அணிவது போன்ற நூதனமான செயல்பாடுகளுடன், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுதாக்கல் செய்தனர். அதோடு, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்:

அதன்படி, மொத்தம் 56 வேட்பாளர்கள் சார்பில்  64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையின் முடிவில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாரேனும் திரும்பப் பெற விரும்பினால் இன்று மாலை வரை அவகாசம் உள்ளது. அதனை தொடர்ந்து இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்:

இதில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா, பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதால், இது  திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான மும்முனைப்போட்டியாக நிலவுகிறது. 

வாக்குப்பதிவும், முடிவுகளும்:

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, பதிவான வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் திமுக மற்றும் பாமக சார்பிலான முக்கிய பிரமுகர்கள் யாரும் இன்னும் தங்களது பரப்புரையை தொடங்கவில்லை. மானியக் கோரிக்கை தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததுமே, இடைத்தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைய உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பரப்புரையில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள்,  தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sasikala: இனி வேடிக்கை பார்த்தால் வேலைக்காகாது! ஒன்றிணையும் அதிமுக? சசிகலா சரவெடி! அலறும் இபிஎஸ்!
Sasikala: இனி வேடிக்கை பார்த்தால் வேலைக்காகாது! ஒன்றிணையும் அதிமுக? சசிகலா சரவெடி! அலறும் இபிஎஸ்!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
MK Stalin: சொன்னதை செய்து காட்டிய மு.க.ஸ்டாலின்.. 3 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!
MK Stalin: சொன்னதை செய்து காட்டிய மு.க.ஸ்டாலின்.. 3 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget