மேலும் அறிய

AIADMK: என்னையே எதிர்க்கிறீங்களா? எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய இபிஎஸ்!

AIADMK: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களை  எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து இருந்து அதிரடி நீக்கியுள்ளார்.  

அதிமுக தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரை பற்றி இங்கு கேள்வி எழுப்ப வேண்டாம் என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த இரண்டு கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டுதான் தாங்கள் இன்றைக்கு பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள் என தெரிவித்திருந்தார்.  

அதிமுக தலைமை

இந்நிலையில் தான் கட்சியின் தலைமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் அதிமுகவில் இனி யாரும் அறிக்கை மற்றும் செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். மாறாக அதிமுக தலைமையிடம் தொடர்ந்து ஒப்புதல் பெற்ற பின்னரே செய்தியாளர் சந்திப்பு மற்றும் அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இபிஎஸ் எதிராக பதிவு

இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில் அப்படி பதிவிட்டிருந்த எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

அதிமுகவில் இருந்து நீக்கம்

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை புறநகர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த

* M.R. சபரி விக்ரம், ( மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் )

* R. சுரேஷ்குமார் தாஸ், ( குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் )

* P. வேணுகோபால், ( மேட்டூர் ரோடு, போத்தனூர் )

* J. பரத்குமார், ( சீனிவாசன் நகர், போத்தனூர் )

* A. சேகர் ( 98-ஆவது வட்டக் கழக முன்னாள் செயலாளர், 7-வது குறுக்கு வீதி, காந்தி நகர், சுந்தராபுரம்)

* G. பிரபாகரன், ( எம்.ஜி.ஆர். நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர் பகுதி )

ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
DMK: ”குப்பை தொட்டியில் வீசிவிட்டு, நள்ளிரவில் எகிறி குதித்த..” காங்கிரஸை போட்டு பொளந்த திமுக
”குப்பை தொட்டியில் வீசிவிட்டு, நள்ளிரவில் எகிறி குதித்த..” காங்கிரஸை போட்டு பொளந்த திமுக
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
Embed widget