திமுகவின் முடிவு முதுகில் குத்தும் செயல்! பிரகாஷ் ராஜ் ஆவேசம்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது ஒட்டுமொத்த மக்களின் முதுகில் குத்து செயல் இல்லையா என பிரகாஷ் ராஜ் கேள்வி

மதம், மொழி, இனம் சார்ந்த சிறுபான்மையினருக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் இந்த மசோதா ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது முதுகில் குத்தும் செயல் இல்லையா?
திரு ஸ்டாலின் அவர்களே அவசர அவசரமாக பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையரை மசோதா ரொம்ப ரொம்ப ஆபத்தானது. மதம் , மொழி , இனம் சிறுபான்மையினருக்கு இந்த நாட்டின் இறையான்மைக்கு எதிரானது. இதை எல்லாருக்கும் உணர்ச்சிய திமுக இன்று மதவாத சக்திக்கு துணை போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா. இது முழுக்க முழுக்க சுயநலமானது. ஒட்டுமொத்தமான மக்களுக்கு துரோகம் செய்யும் இந்த முடிவை ஏற்க முடியாது. மாநில உரிமைக்கு போராடி இந்தியாவுக்கே வழிகாட்டிய திமுக இப்போது வரலாற்று பிழையான ஒரு முடிவை எடுக்க கூடாது. இந்த முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் . இன்று நீங்கள் எடுக்கும் இந்த முடிவு அடுத்த தலைமுறையை தீர்மானிக்கப் போகிறது. அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்று நீங்களே முடிவு பண்ணுங்க. ப்ளீஸ்" என பிரகாஷ் ராஜ் வீடியோவில் பேசியுள்ளார்
a request to Thiru Stalin sir. .. In the interest of the Nation.. please reconsider your support to #DelimitationBill https://t.co/CVfTnVsyAj
— Prakash Raj (@prakashraaj) November 28, 2026
தொகுதி மறுவரையரை மசோதா - திமுகவின் இரட்டை நிலைப்பாடு
இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத மக்களவைப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்றும், 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மாநிலங்களுக்கிடையிலான பிரதிநிதித்துவ விகிதம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியது. இந்த இரண்டு கோரிக்கைகளும் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, நவம்பர் 28-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவம் குறையாது என்பதால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அதேநேரத்தில், தொகுதிகளை மறுவரையறை செய்யும் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கோரப்படும் என்றும் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்























