மேலும் அறிய

PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

PM Modi: கடந்த மார்ச்சில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. 

திருப்பரங்குன்றம்

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை ஆட்சியர் உள்ளிட்டோருக்கு எதிராக ராம ரவிக்குமார், ராமசுப்பு உள்ளிட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அறங்காவலர் குழு கலைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் தலைமையில் குழு அமைத்தது. மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை இன்று ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இன்று மாலை 5 மணிக்கு தீபம்

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதிகள் இன்று காலை மதுரைக்கு வருகை தந்தனர். பின்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய் உள்ளிட்ட பொருட்களைக் நீதிபதிகள் குழு கொண்டு சென்றனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி

இந்நிலையில் இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி போட்ட பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பதிவிட்டிருந்தார். மேலும் கடந்த மார்ச்சில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்த போது அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று இரவு 2k கிட்ஸை கவரும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் இன்று (GenZ) இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பிரதமர் மோடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு புதிய உணவு முறை! வந்தே பாரத் ஸ்லீப்பரில் இனி இதுதான் மெனு!
ரயில் பயணிகளுக்கு புதிய உணவு முறை! வந்தே பாரத் ஸ்லீப்பரில் இனி இதுதான் மெனு!
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?

Embed widget