Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுக்கு இடையே திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை ஆட்சியர் உள்ளிட்டோருக்கு எதிராக ராம ரவிக்குமார், ராமசுப்பு உள்ளிட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை
இந்த வழக்கு விசாரணையின் போது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அறங்காவலர் குழு கலைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் (முன்னாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர்நீதிமன்றம்), வி.பார்த்திபன் (முன்னாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்) தலைமையில் குழு அமைத்தது. மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை இன்று ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதிகள் இன்று காலை மதுரைக்கு வருகை தந்தனர். பின்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய் உள்ளிட்ட பொருட்களைக் நீதிபதிகள் குழு கொண்டு சென்றனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய அரசின் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்விற்காக திருக்கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட குழுவினரைத் தவிர இதர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தீபத்தூணில் தீபம்
இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் வெற்றிகரமாக ஏற்றப்பட்டது.
இதையடுத்து, திருப்பரங்குன்ற பகுதி மக்கள் பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து பழனி ஆண்டவர் கோவில் முன்பாக திரண்டிருக்கும் முருக பக்தர்கள், ரத வீதியில் உள்ள முருக பக்தர்கள் தீபம் ஏற்றப்பட்டது அடுத்து அரோகரா கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.ஆனந்த கண்ணீரில் அரோகரா என முழக்கமிட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























