Vijay vs Ajith: 20 ஆண்டு வன்மம்! விஜய் அஜித் போட்டாபோட்டி? PRESSMEET-ஆல் வெடித்த பூகம்பம்
ஒருமுறை பத்திரிக்கையாளரை சந்திக்காத விஜய், நடிகர் அஜித் பிரஸை சந்தித்ததால் போட்டி மனப்பான்மையில் நேற்றைய தினம் ப்ரஸ்மீட் கொடுத்துள்ளதாக நெட்டிசன்ஸ் கொளுத்தி போட்டுள்ளனர்.

அரசியல் கட்சி தொடங்கியும் இதுவரை ஒருமுறை ப்ரஸை சந்திக்காத விஜய், நடிகர் அஜித் பிரஸை சந்தித்ததால் போட்டி மனப்பான்மையில் நேற்றைய தினம் ப்ரஸ்மீட் கொடுத்துள்ளதாக நெட்டிசன்ஸ் கொளுத்தி போட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் இருவருமே நீண்ட நாட்களாகவே திரை வாழ்க்கையில் ஹெவி காம்பட்டீட்டர்ஸாக இருந்து வருகின்றனர். 90ஸ் ல் தொடங்கிய இந்த ரேஸ் தற்போது வரை எண்டுக்கு வந்த பாடில்லை. தல தான் மாஸ் தளபதி தான் மாஸ் என இருவர் ரசிகர்களும் சண்டைப்போட்டுக்கொள்வது நெடுங்கால வழக்கம் என்றே சொல்லலாம்.
சினிமாவில் இருதுருவங்கள் என்றாலும் பொதுவெளியில் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது குடும்பத்துடன் இருவரும் சிரித்து பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இந்த நடிகர்களும் சினிமாவை ஓரங்கட்டிவிட்டு தங்களது திசையை மாற்றி வருகின்றனர். இன்னும் ஒரே படம் தான் அப்றம் ஃபுல் டைம் பொலிட்டிசியன் என அரசியல் ரூட்டெடுத்து சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்டார் விஜய். அதே நேரத்தில் அஜித்தோ கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்திய அரசு அஜித்துக்கு பத்ம பூசன் விருது வழங்கி கௌரவித்தது.
அஜித் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருபவர், லைம்லைட்டில் இருப்பதை விரும்பாத ஓர் செலிபிரிட்டி, அவர் கடைசியாக பேட்டி அளித்தும் வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் விஜய்யோ தனது சினிமா மேடைகளில் கூட அரசியல் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அரசியல் எண்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த 2024 பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய் மீது அரசியல் ரீதியில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. பண்ணையார், வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல், பார்ட் டைம் பொலிடீஷியன் என இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் முக்கியமாக எழும் விமர்சனம் ஒன்று ப்ரஸ்ஸை சந்திக்காதது.. கட்சி தொடங்கி ஓராண்டு ஆகியும் விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன், செலிபிரிட்டி ஸ்டேடஸை மறக்கமுடியலயா இல்லை பயமா என பல கிரிட்டிஸிஸம்ஸ் எழுந்தது. எனினும் எதுக்கும் செவிசாய்க்காத விஜய், நேற்று முதல்முறையாக பிரஸ்ஸை சந்தித்தார். அதுவும் படப்பிடிப்புக்காக மதுரை செல்லும் விஜய் சென்னை ஏர்போட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.
விஜய் பிரஸ்ஸை சந்திக்கும் மொமண்ட்க்காக அனைவரும் காத்திருந்த நேரத்தில் சைலண்டாக வந்து சந்தித்துவிட்டார். அரசியல் பேசாமல் சினிமா நடிகராகவே அவர் அந்த பேட்டியை அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று பத்ம பூசன் விருதை பெற்ற அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்புகையில் ஏர்போட்டில் செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது இரண்டே வார்த்தைகளில் பேசிய அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்ற அப்டேட் கொடுத்தார்.
மீடியா பக்கமே தலைகாட்டாத அஜித் விரைவில் ப்ரஸ்மீட் கொடுக்கப்போகிறேன் என அறிவித்தது தான் விஜய் திடீரென பிரஸை சந்தித்ததற்கான காரணம் என்கின்றனர் சிலர். அதே நேரத்தில் சினிமா வேறு அரசியல் வேறு அவர்களுக்குள் எந்த போட்டியும் இல்லை சும்மா கிளப்பி விடாதீங்கப்பா எனவும் மறுசாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





















