மேலும் அறிய
Advertisement
MLA Speech : முதலமைச்சரின் நல்லெண்ணத்தை கெடுக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர் - திருப்போரூர் எம்.எல்.ஏ.
மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வனத்துறை, மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் மெத்தனப்போக்காக செயல்படுவது கண்டிக்கத்தக்கது
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்மற்றும் மக்களை தேடி மருத்துவம் சார்பாக இலவச மருத்துவ முகாம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் பரிசோதனை செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியளர்களை சந்தித்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கூறுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் முதல்வர் தொகுதி மட்டும் அல்லாமல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி உள்பட 234 தொகுதிகளுக்கும் சேர்த்து, அந்தந்த தொகுதியில் உள்ள முக்கிய முதன்மையான 10 கோரிக்கைகளை கண்டறிந்து மனு அளித்தால் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் உடனடி தீர்வு காணப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
வனத்துறை கட்டுப்பாட்டில்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி என்பது சென்னைக்கு அருகாமையில் சென்னையை ஒட்டி உள்ள முக்கியமான சென்னை போல் வளர்ந்து வரும் தொகுதியாகும். பல்வேறு தொகுதிகளில் இது போன்ற பிரச்சனை இருந்தாலும் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் உள்ள சாலைகள் திருப்போரூர் தொகுதியில் அதிகமாக இருப்பதாகவும் (12ஆண்டுகளுக்கும் மேல்) நீண்ட நாட்கள் பழுந்தடைந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
சாலைகளை சரி செய்யக்கோரி பல ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அடிப்படையில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழை எளிய மக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலைகள், கிராமங்களில் இருந்து நகர்ப்புறம் செல்வதற்கு இணைப்பில்லாமல் உள்ள சாலைகாலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகள்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் காப்புக்காடு சாலைகளை அமைக்க கோரி சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கை வைத்ததாகவும், பத்து கோரிக்கைகளில் முதன்மை கோரிக்கையாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி கூறியுள்ளார். திருப்போரூர் சுற்றுவட்ட பகுதிகளில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு கலைஞர் ஆட்சியில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது அதன் பிறகு , ஏழை எளிய மக்களுக்கு இதுநாள் வரையில் வீட்டு மனை பட்டா, சிட்டா அடங்களில் ஏற்றப்படாமல் வலுவிழந்து, உரிமை இழந்து போகக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கபட்ட மக்களுக்கும், இது போன்ற சூழலில் குறைந்த பட்சம் மின் இணைப்பு கூட கொடுக்கப்படாமல் மெத்தனபோக்காக செயல்பட்டு வருகின்றனர் அரசு அதிகாரிகள்.முதன்மை கோரிக்கைகளில் இதனை இரண்டாவது கோரிக்கையாக வைத்துள்ளனர்.
எஸ் எஸ் பாலாஜி குற்றம் சாட்டினார்
முதல்வர் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும், போக்குவரத்து துறை கூட்டத்தின் போது போக்குவரத்து துறை அதிகாரி கலந்து கொள்ளாமல் அலட்சிய காட்டுவதாகும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி குற்றம் சாட்டினார்.
இது தமிழக முதல்வர் நல்லெண்ணத்திற்கும், விருப்பதிற்கும் அவருடைய உடல் நலம் பாராமல் மக்களுக்கு சேவை செய்கின்ற நல்லெண்ணத்திற்கு கேடு விளைவிக்கின்ற அடிப்படையில் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசு இதனை கவனம் கொள்ள வேண்டும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அரிகால் அதிகாரி மீது நடவடிக்கை கோரி கடிதம் எழுத உள்ளதாகவும், கூறியுள்ளார்.
அனுமதி பெறவேண்டும் என்ற சூழல் உள்ளது
இது போன்ற மெத்தன போக்கால் பொதுமக்களுக்கு சாலை வசதி கிடைக்காமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீர்,பேருந்து போக்குவரத்து, போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் , வனத்துறை சாலைகள் பிரச்சனை என்பது திருப்போரூர் தொகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தில் மொத்தம் 512 காப்பு காடுகளில் உள்ள சாலைகள் ஒன்றிய அரசினுடைய வனத்துறையில் முறையான அனுமதி பெறவேண்டும் என்ற சூழல் உள்ளது.
இந்த சாலைகள் அமைப்பதற்கு கடந்த 12 ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் நிலுவையில் உள்ளது. முதல்வர் தனது விருப்பத்தை தெரிவித்தும் ஆனால் அதை முறைப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்காக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில சட்டமன்றங்களிலும் பேசிய போது இது ஒவ்வொரு தொகுதியிலும் இது போன்ற பிரச்சனைகள் நீடித்த வண்ணமாக உள்ளது. உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள காப்பு காடுகளில் வசிக்கும் போது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதால் சாலை அமைத்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion