அதிர்ச்சி! 10.5% இட ஒதுக்கீடு வேண்டாம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி! சரமாரி குற்றச்சாட்டு!
"வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இதோ ஒருக்கிட வேண்டாம் 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என செய்யாற்றில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்"

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற உரிமை மீட்பு நடைப்பயணத்தின்போது, தி.மு.க. அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
விவசாய நிலங்களை அழிக்காமல் சிப்காட் தொழிற்சாலைகள் அமைய வேண்டும்
பொதுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது: விவசாயிகள் நலனுக்காகப் பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், விவசாய நிலங்களை அழித்து எந்தத் தொழிற்சாலையும் வரக்கூடாது என்று வலியுறுத்தினார். "சிப்காட் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வேலைவாய்ப்பு வேண்டும். ஆனால், விவசாய நிலத்தை அழித்து எதுவும் வேண்டாம். இந்த நிலம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களுக்கு உணவு அளித்தது.
நமக்குப் பிறகு பல ஆயிரம் சந்ததியினருக்கு உணவளிக்க வேண்டிய மண். நமக்கு இந்த மண்ணை அழிக்க எந்த உரிமையும் இல்லை" என்றார். போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டதை அவர் கடுமையாகக் கண்டித்தார். இது முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் வெட்கக்கேடான செயல் என்று கூறிய அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் தொழிற்சாலைகளை அமைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் 'சுற்றுலா' மட்டுமே: அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், அவர் முதலீடுகளை ஈர்க்கச் செல்லவில்லை, மாறாக சுற்றுலாதான் சென்றுள்ளார் என்று விமர்சித்தார். "இதுவரை நான்கு முறை வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர், ரூ. 10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்த்ததாகப் பொய்யைக் கூறி இருக்கிறார். தி.மு.க. செய்த ஒரே முதலீடு, பொய் என்ற முதலீடு மட்டும்தான்" என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக முதலமைச்சர் கூறுவதும் மிகப்பெரிய பொய் என்றும், அவர் சொல்வதில் 10 சதவீதம் மட்டுமே முதலீடு வந்திருக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். "விடியல் அரசு புத்தகத்தைப் போட்டது போல், முதலீடு குறித்துப் புத்தகம் தயாராகி வருகிறது. அதையும் நான் வெளிக்கொண்டு வர இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாததற்குக் காரணம் அமைச்சர் எ.வ.வேலு தான்
பெரிய மாவட்டங்களைப் பிரிப்போம் என வாக்குறுதி அளித்தும், 50 மாதங்கள் ஆட்சியில் இருந்த பிறகும் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரிக்காததற்கு, அமைச்சர் எ.வ.வேலுதான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
"திருவண்ணாமலை இரண்டாவது பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள தூசி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்டத் தலைநகருக்கு 116 கிலோமீட்டர் செல்ல வேண்டும். தனி ஒருவருக்காகத் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பாதிப்படைய வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
வன்னியர்களுக்கு இனி 15% இட ஒதுக்கீடு தேவை: அன்புமணி ராமதாஸ
வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "இனி 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கேட்காதீர்கள். இனி நீங்கள் கேட்க வேண்டியது 15 சதவீத இட ஒதுக்கீடுதான்" என்று வலியுறுத்தினார்.
மேலும், தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், பாலாறு, தென்மடபெண்ணை ஆறு, செய்யாறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளை இணைப்பேன் என்றும், மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.





















