மேலும் அறிய

'ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடத்த தடை விதிப்பதா?' - வானதி சீனிவாசன் கண்டனம்

Ram Temple : கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Ayodhya Ram Temple : பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நாளை நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும்  விழாக்கோலம் பூண்டுள்ளது. நம் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்திப் பாடல்களை கூட்டாகப் பாடும் பஜனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆன்மிக அமைப்புகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன.

ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமல்லாது திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொது மக்களும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திமுக அரசின் காவல் துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்க முடியாத அட்டூழியம் இது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களுக்கு திமுக அரசின் இந்த அராஜகங்கள் கொடுங்கோல் ஆக்கிரமிப்பாளன் அவுரங்கசீப் ஆட்சியை நினைவூட்டுகிறது. ராமர் கோயிலுக்காக 500 ஆண்டு காலம் போராடிய இந்துக்கள், ராமர் கோயில் திறப்பு நாளை கொண்டாடவும் போராட வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் மூன்று நாட்களாக தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டதால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை அடக்க நினைக்கிறது திமுக அரசு. அடக்குமுறைகளால் மக்களின் பக்தி உணர்வை, ஆன்மிக எழுச்சியை தடுத்துவிட முடியாது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

எனவே, நாளை கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடத்த திமுக அரசு தடை விதிக்கக் கூடாது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப்பெற வேண்டும். கோயில்கள், பொது இடங்களில் நாளை சிறப்பு வழிபாடு, விழாக்கள் நடத்த அன்னதானம் வழங்க தடை இல்லை என தமிழ்நாடு அரசு வெளிப்படையாக உடனே அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
Embed widget