வைகோவின் ரகசியங்கள் அம்பலம் !! மதுபான ஆலை வருமானம் - மல்லை சத்யா பரபரப்பு குற்றச்சாட்டு
வைகோ , உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால் அவருக்கு கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது - மல்லை சத்யா

மதுபான ஆலைகளால் வைகோவுக்கு வருமானம் ;
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லை சத்யா , செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது. அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால் அவருக்கு கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது. அதை வைத்து தான் வீட்டை அவர் கட்டியிருக்கிறார். வைகோ உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில் , மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார்.
ரகசிய புதுமனை புகு விழா ;
ரூ.5 கோடி மதிப்பில் மிகப் பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டியிருக்கிறார். அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக் கூடாது என ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தினார். துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார் வைகோ.
வைகோ ஒரு நாள் வருத்தப்படுவார் ;
புதிய அரசியல் இயக்கம் ;
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாங்கள் சென்னை அடையாறில் வரும் 20 - ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளோம். கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழுவினருக்கு மட்டுமே புதிய அரசியல் இயக்கத்தின் பெயர் தெரியும். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
துரை வைகோவிடம் அரவணைப்பு இல்லை ;
திமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறது, ஆனால் துரை வைகோவிடம் அவை இல்லை என மல்லை சத்யா பதிலளித்தார்.





















