”ஒருவர் பச்சை கலர், இன்னொருவர் மஞ்சள் கலர் பஸ்! ஜெயிக்க போவது பிங்க் கலர் பஸ் தான்” - உதயநிதி
ஒருத்தர் பச்சை கலர் பஸ்.. மற்றொருவர் மஞ்சள் கலர் பஸ் எடுத்துட்டு போய்ட்டு இருக்காங்க..! ஆனால் கடைசியில் ஜெயிக்க போவது பிங்க் கலர் பஸ் தான் என்று துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin : ஒருவர் பச்சை கலர் பேருந்திலும், இன்னொருவர் மஞ்சள் கலர் பேருந்திலும் போய்க்கொண்டிருக்கின்றனர் ஆனால் அதை எல்லாம் ஓவர்டேக் செய்து கடைசியில் வெற்றி பெற போவது பிங்க் கலர் பேருந்து தான் என்று கூறி எடப்பாடி பழனிசமி மற்றும் விஜயை மறைமுகமாக சாடியிருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வங்கிகடன் இணைப்பு விழா:
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிகடன் இணைப்பு வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பாராட்டிய பாமக எம்.எல்.ஏ-க்கள்:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “2502 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பையும், குழு சகோதரிகளுக்கு ஒரு லட்சம் அடையாள அட்டைகளையும் உங்களை எல்லாம் சந்தித்து வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு உதவிகளை நமது அரசு செய்துகொண்டிருக்கிறது என்று போட்டி போட்டுக்கொண்டு நமது அரசை பாராட்டியிருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் சிறப்பான மக்கள் பணியாற்ற வேண்டும் என்று உங்கள் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிலேயே மகளிருக்கு என்று முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியது கருணாநிதி தான். அவர் போட்ட விதை தான் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5 லட்சம் குழுக்களாக தமிழ் நாடு முழுவதும் பரவியிருக்கிறது”என்றார்.
பிங்க் கலருக்கு தான் வெற்றி:
தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக சாடினார். அதாவது, “சமீபத்தில் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒருவர் பச்சை கலர் பேருந்து, இன்னொருவர் மஞ்சள் கலர் பேருந்தை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், கடைசியில் இதையெல்லாம் ஓவர் டேக் செய்யப்போவது பிங்க் கலர் பேருந்து தான். மகளிர் நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் பிங்க் கலர் பேருந்து தான் எல்லா பேருந்துகளையும் ஓரம் கட்டி விட்டு வெற்றி பெறப்போகிறது. உங்களுக்காக உழைப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.2026 ஆம் ஆண்டும் நம்முடைய அரசு ஆட்சி அமைக்கு இங்கு வந்திருக்கும் மகளிர் ஆதரவு அளிக்க வேண்டும்”என்று கூறினார்.





















