TVK District Secretaries 2nd List: தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் இதோ... வெள்ளி நாணயத்துடன் பொறுப்பை வழங்கிய விஜய்...
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் விஜய். 19 பேருக்கு வெள்ளி நாணயத்துடன் ஆணைகளை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக, 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 19 பேர் அடங்கிய முதல் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று(29.01.25) 2ம் கட்டமாக, 19 பேர் அடங்கிய பட்டியலை, கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
ஆலோசனைக்குப்பின் 19 பொறுப்பாளர்கள் அடங்கிய 2-ம் கட்ட பட்டியல்
சென்னை பனையூரில் உள்ள தவெக-வின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின், 19 பொறுப்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டார் விஜய். அதன்படி,
சென்னை புறநகர் - சரவணன், தென் சென்னை(தெ) - தாமு, தென் சென்னை(வ) - க. அப்புனு, அம்பத்தூர் - பாலமுருகன், கள்ளக்குறிச்சி(மே) - பிரகாஷ், புதுக்கோட்டை - பர்வேஸ், நாகை - சுகுமார், தருமபுரி மேற்கு - எம். சிவன், குமரி(ம) - கிருஷ்ணகுமார், குமரி(மே) - சபின், குமரி(கி) - மாதவன், மதுரை(தெ) - தங்கபாண்டி, மதுரை(கி) - விஜய் அன்பன் உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, தன்னுடைய முகம் பதித்த வெள்ளி நாணயத்துடன், நியமன ஆணைகளை விஜய் வழங்கியுள்ளார்.

