TVK Vijay : ஆளுநரை சந்தித்த விஜய்! களேபரமான தமிழக அரசியல்.. யார் ஆதரவு? யார் எதிர்ப்பு?
TVK Vijay: தவெக தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்து பேசினார், அதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்த நிலையில் அதற்கு தற்போது ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
வன்னி அரசு எதிர்ப்பு:
விஜயின் சந்திப்பு குறித்து திமுக கூட்டணி கட்சியான விசிகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் “ ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல் என்று வன்னி அரசு காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஆளுனரை சந்தித்து முறையிடுவதை
— வன்னி அரசு (@VanniKural) December 30, 2024
சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது.
ஆளுனர் ரவி அவர்களை
திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார்.
ஊடகவியலாளர்களை கண்டு…
அண்ணாமலை ஆதரவு:
விஜய்-க்கு ஒரு புறம் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மறுபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது,” அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்து பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் திரு. விஜய்அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், @BJP4Tamilnadu தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.…
— K.Annamalai (@annamalai_k) December 30, 2024
ஆளுநரை சந்தித்த விஜய்:
முன்னதாக ஆளுநரை நடிகர் விஜய் மதியம் 1 மணி அளவில் சந்தித்து பேசினார். ஆளுநர் இல்லத்தில் 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜயின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அனைவருக்கும் வணக்கம்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். நன்றி” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.