வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிவது எப்படி?
’Linked Device’-ல் உங்களுடைய கேஜட்கள் தவிர ஏதேனும் இருக்கிறதா என்பதை செக் செய்யவும். அப்படி இருந்தால் Log Out செய்யவும்.
ஸ்மாட்ஃபோன் தொலைந்துவிட்டாலோ அல்லது யாராவது ஹேக் செய்தாலோ வாட்ஸ் அப் எண், புரொஃபைல் பிக்சர், பெயர் மாறியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
வாட்ஸ் அப் சாட் பாக்ஸில் மெசேஜ்களை கவனிக்கவும். நீங்கள் அனுப்பாமல் யாருக்காவது மெசேஜ் அனுப்பட்டிருந்தால் உடனே கவனிக்கவும்.
வாட்ஸ் அப் - Contacts list-ஐ செக் செய்யவும். உங்களுக்கு தெரியாத நபர்கள் எண்கள் இருந்தால் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று பொருள்.
உங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வெரிஃபிகேசன் மெசேஜ் ஏதும் வருகிறதா என்பதை கவனிக்கவும்.
வாட்ஸ் அப் அக்கவுண்ட் உங்களால் Log in செய்ய முடியவில்லை என்றாலும் ஹேக் செய்யப்பட்டிருப்பது உறுதி.
Two-step verification - எனேபிள் செய்து வைப்பது பாதுகாப்பானது.