மேலும் அறிய

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை - டிடிவி தினகரன்

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இளைஞர்களையும் மாணவர்களின் குறி வைத்து இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. ஜெயலலிதா அனைவருக்கும் பொதுவானவர். ஜெயக்குமார் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

வேலூருக்கு வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தினகரன் பேசியதாவது:

கடந்த முறை தேர்தல் முடிந்த பிறகு கேதர்நாத் சென்றார் பிரதமர். தமிழகம் வருவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது இல்லை. விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் தவம் இருப்பதால் வாக்காளர்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியினர் மோடியைக் கண்டு பயப்படுகிறார்கள். மோடியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எதிராக பேசுவதை, வேலையாக வைத்திருக்கிறார்கள் என்றார்.

வெறி பிடித்த யானையை விட கொடூரமானது பாஜக என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே என கேட்டதுக்கு, பாஜக கூட்டணியில் இருந்த போது அவருக்கு தெரியவில்லையா. இவர்கள் வெளியே வந்ததும் அவர்களுக்கு மதம் பிடித்து விட்டது. அரசியலுக்காக திமுக சிறுபான்மையினரின் காவலர்கள் என காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டில் கோயிலுக்கு சென்று பூஜை செய்கிறார்கள். இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை. இதுபோன்ற மலிவான அரசியலை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை  - டிடிவி தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை

பிரதமர் தியானம் செய்வதினால் என்ன பாதிப்பு ஏற்பட போகிறது. அது நல்ல விஷயம் தானே? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா எம்பியாக இருந்தபோது காஷ்மீருக்கு 370 வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார். மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியலுக்காக ஏதாவது சொல்லி வருகிறார்கள. தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பரவி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதினால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இளைஞர்களையும் மாணவர்களின் குறி வைத்து இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை எல்லாம் தடுத்து,

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை  - டிடிவி தினகரன்

பழனிசாமி பதவி சுயநலம் வெறி பணத்திமிர் அதிகார திமிர் ஆட்டம் போடுகிறார்

வருகின்ற சமுதாயத்தை பாதுகாக்கின்ற முயற்சியில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் இதனை செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமலும் மற்றும் அணைகளையும் கட்டி வருகின்றனர். இதனை இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வந்தால் தான் தீர்க்க முடியும்  என்று டிடிவி தினகரன் கூறினார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் பழனிசாமி போன்றவர்கள் பதவி சுயநலம் வெறி பணத்திமிர் அதிகார திமிர் ஆட்டம் போடுகிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து வருவார்கள் என என்னுடைய நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget