Annamalai: ’அண்ணன் அண்ணாமலை வர்றார் வழிய விடு’ - அவிநாசியில் 3 ஆம் கட்ட பாதயாத்திரை தொடக்கம்..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒத்திவைக்கப்பட்ட பாதயாத்திரை இன்று மீண்டும் தொடங்கவுள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Annamalai: ’அண்ணன் அண்ணாமலை வர்றார் வழிய விடு’ - அவிநாசியில் 3 ஆம் கட்ட பாதயாத்திரை தொடக்கம்..! tn bjp leader annamalai's 3rd phase padhayatra starts again from today Annamalai: ’அண்ணன் அண்ணாமலை வர்றார் வழிய விடு’ - அவிநாசியில் 3 ஆம் கட்ட பாதயாத்திரை தொடக்கம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/84a6bcc40597aca56d644d9a1781ca131697421986474572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒத்திவைக்கப்பட்ட பாதயாத்திரை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் முழு வீச்சில் தங்களை தயார் படுத்தி வருகின்றன. கூட்டணி , தொகுதி பங்கீடு என சிறிய கட்சிகளும் பேச்சுவார்த்தையை கிட்டதட்ட தொடங்கிவிட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் படிப்படியாக வளர்ந்து வரும் பாஜகவும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் மேலும் தங்கள் பலத்தை நிரூபிக்க முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றதே அக்கட்சியினருக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை அப்படியே தக்க வைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொண்டர்கள் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக தீவிர களப்பணி ஆற்றி வருகிறார்கள். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார்.
அரசியல் கட்சி தலைவர்கள் பாதயாத்திரை நடத்துவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் அதன் பலன்களை அரசியல் வட்டாரத்தினர் நன்கு அறிவார்கள். ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ராமேஸ்வரத்தில் அண்ணாமலை தன் பாத யாத்திரையை தொடங்கினார். முக்கிய இடங்களில் எல்லாம் ஆளும் திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார். இப்படியான நிலையில் மத்தியின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இதற்கு அறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது ஒரு காரணமாக அமைந்தது.
இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே பாதயாத்திரை கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால், அவர் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தீவிரமாக அறிவுறுத்தினர். இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பாதயாத்திரை மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது
அதன்படி அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3 ஆம் கட்ட பாதயாத்திரை தொடங்கினார். இதன் பின்னர் அக்டோபர் 19 ஆம் தேதி பல்லடத்திலும், அக்டோபர் 20 ஆம் தேதி கோவையிலும் பயணம் மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரை நிகழ்வின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் அளித்த வாக்குறுதி.. ஐந்து மாநில தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)