மேலும் அறிய

Annamalai: “எவ்வித உள்நோக்கத்துடன் ரெய்டு நடக்கவில்லை” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

பாஜக மாநில மையக் குழு கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

பாஜக மாநில மையக் குழு கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. ரெய்டு உள்நோக்கத்துடன் நடக்கவில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டால் மக்கள் பணம் வெளிவருகிறது.

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் போராட்ட களமாகியுள்ளது.” என்று கூறினார்.

அப்போது பேசிய அவர், “2024 ஆம் ஆண்டிற்கான எலக்சன் (தேர்தல்) பீவர் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போதைக்கு மோடி அரசு மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே.

அது 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லை. அதற்கான நேரம் வரும் பொழுது தெரியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.  அதற்கு முன்னதாக பாஜக செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அதை நோக்கித்தான் பாஜக சென்று கொண்டிருக்கிறது.  ஒரு அகில இந்திய கட்சியாக ஐந்து மாநில தேர்தல்களை எதிர் கொள்கிறோம். அதில் மூன்று முக்கியமான மாநிலங்கள் இந்தி பேச கூடிய மாநிலங்கள். அதை தவிர்த்து மிசோரம் மற்றும் தெலங்கான இருக்கிறது.  அதனால் இன்றைக்கு அதற்கான அவசரம் எதுவும் இல்லை.” என்றார்.

 2024 தேர்தலுக்காக, 10 மாதங்களாக, தேசிய அளவில், 161 தொகுதிகள், தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் தேர்வு செய்து பணிகள் நடைபெற்று  வருவது குறித்த கேள்விக்கு  பதிலளித்த அவர், ” அதே வேலையை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் செய்வோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் இருப்பதால் வேட்பாளர்கள் குறித்து இப்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. நாட்கள் அதிகம் இருப்பதால் அரசியல் சூழலும், களச் சூழலும் மாறும்.தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு சமூக வலைத்தள நிர்வாகிகளை வீட்டுக்குள் புகுந்து இரண்டு, மூன்று மணிக்கு திமுக அரசு கைது செய்கிறது. அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; கட்டமைப்பை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும். 

தமிழகத்தில் தொடர்ச்சியா ரைய்டு நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம். அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். 

அதேபோல், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் மூன்று நான்கு நாட்களாக வருமானவரித் துறை சோதனை நடந்து வருகிறது.  அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அதில் பெரும் அளவில் பறிமுதல் நடைபெற்றுள்ளது.

இதில் இருந்து தமிழ்நாட்டில் மக்கள் பணம் எந்த அளவுக்கு தனியார் பணமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் வரிப் பணத்தில் அரசியல்வாதிகள் வாழ்வது புதிதல்ல. ஆனால், தற்போது அமலாக்கத்துறையும், வருமானவரித் துறையும் மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக வைக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை ஒரு தனி மனித வருமனமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது மட்டும் அல்லாமல் வருகின்ற காலங்களில் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். 

மேலும் படிக்க: கரூரில் அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி; ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்

மேலும் படிக்க: உதயநிதியை பற்றி வாய் தவறி பேசிவிட்டேன் - பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget