ராமஜெயம் கொலை வழக்கை ரகசியமாக விசாரிக்கும் போலீஸ்; விரைவில் உண்மை மக்களுக்கு தெரிய வரும் என கே.என்.நேரு நம்பிக்கை
விமர்சனம் செய்வதற்காகவே பாஜக தலைவராக அண்ணாமலையை நியமிக்கப்பட்டுள்ளார்; திமுகவை பெருமையாக பேசினால் எப்படி அவர் பாஜகவில் தலைவராக இருக்க முடியும்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், தமிழகத்தில் சொத்து வரி உயர்வு 83 சதவிகித மக்களுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்ந்துள்ளது. 17 சதவிகித மக்களுக்கு மட்டுமே கூடுதலாக சொத்துவரி உயர்ந்துள்ளது. இதில் வியாபாரப் பகுதி, தொழிற்சாலை கட்டிடங்கள், அதற்கு மட்டும் தான் 100 முதல் 150 சதவீதம் வரி வரை உயர்ந்துள்ளது. அதில் 1.7 சதவீதம் பேருக்கு மட்டும்தான் 200 சதவீதம் வரை வரி உயர்ந்துள்ளது. வரி உயர்வு இல்லாமல் ஒவ்வொரு நகராட்சியும் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாது. இது தொடர்பாக ஊராட்சி, நகராட்சி தலைவர்கள் வந்தவர்கள் மற்றும் மக்கள் எதுவும் சொல்லவில்லை, அரசியல்வாதிகள் மட்டுமே வரை வரி ஏறிவிட்டது விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் 15 மாநிலங்களில் வரை உயர்ந்துள்ளது பாஜக ஆளும் மாநிலங்களிலும் சொத்து வரி உயர்ந்துள்ளது. அவர்களும் வரி உயர்வு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் அரசியல் செய்வதற்காக சொல்லி வருகிறார்கள். மக்களின் வளர்ச்சி திட்டங்களை நோக்கி, சென்று கொண்டுள்ளதால் மக்களுக்கு எந்த சிரமமும் இல்லை என்றார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் பற்றி எல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதுவும் கூறவில்லை இந்த சொத்து வரியை பற்றி மட்டும் கேட்கிறார். விமர்சனம் செய்வதற்காகவே பாஜக தலைவராக அண்ணாமலையை நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவை பெருமையாக பேசினால் எப்படி அவர் பாஜகவில் தலைவராக இருக்க முடியும், பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதை திமுக எதிர்கொண்டு வருகிறது. தமிழக மக்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எதிர்கொண்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் கொலை வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் உத்தரவு படி காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் உண்மை நிலவரம் எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியவரும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அதன்பின் பனமரத்துப்பட்டி ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க ரூ. 98 கோடியில் திட்டமதிப்பீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சேலம் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பனமரத்துப்பட்டி ஏரி பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.