மேலும் அறிய

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் மீது வன்முறையும், தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளதாக துரை வைகோ பேட்டி.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசிய காரணத்திற்காக பீகாரை சேர்ந்த 15 இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிர் இழந்ததாக பொய்யான வதந்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் ஏராளமானவை மூடப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுகளில் மீண்டும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் தமிழக முதல்வர் முயற்சியால் பல லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சாலைகள் துவங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமான தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 50 முதல் 75 சதவீதம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த தொழிற்சாலைகளும் முடங்குவதற்கு காரணமாக இருக்கும்.

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

தமிழகத்தில் தமிழ் தேசியம் என்று தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றனர். தமிழக இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.உடல் உழைப்பு தருகின்ற தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் தமிழக இளைஞர்கள் யாரும் ஈடுபட விரும்புவதில்லை இதை விட்டு உயர்தர வேலைகளுக்கு தமிழக இளைஞர்கள் சென்று விட்டனர். தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் தமிழக தொழிற்சாலை முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர். தமிழக தொழிற்சாலைகளில் நிறைய இடங்களில் ஆட்கள் தேவை என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞர்களால் தான், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாத் உமரோ, பாஸ்கர் மற்றும் தண்ணீர் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிக்கை தவறான வதந்திகளை பரப்பி வருகிறது. பிரசாத் உமரோவிற்கு இது முதல்முறை அல்ல, ஏற்கனவே பலமுறை தவறான வதந்திகளை தொடர்ந்து பரப்பியுள்ளார். இவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கூறும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.அவர்கள் மீது வன்முறையும்,தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி பொருளாதாரத்தை முடக்க பார்க்கிறார்கள்.தமிழர்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் இது உள்ளது என்றும் பேசினார். தமிழ்நாட்டில் உள்ள சில நபர்கள் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த இளைஞர், முன்னாள் காவல் அதிகாரி இது போன்ற கருத்துக்கள் சொல்வது தமிழகத்திற்கு துரதிஷ்டமான ஒன்று, தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து பல வதந்திகளை பரப்பி வருகிறார்.

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

கொரோனா காலத்தில் இருந்தது போன்று வட மாநில தொழிலாளர்கள், இந்த பிரச்னையால் புறப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும். தமிழகத்தில் நடைபெறும் குற்றசம்பவங்களில் வட மாநிலத்தில் இருந்து வரும் வாலிபர் சிலர் ஈடுபடுகிறார்கள். 100 சதவிதத்தில் 5 சதவீதம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள், அதிகமாக ஈடுபடவில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீதமுள்ள குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை, 29 ஆயிரம் கோடி கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புக்கு பதில் 20 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அறிவித்து விட வேண்டும் என்று கூறினார். தமிழகத்திற்கு கலெக்டர் வேலைக்கு வடமாநில தொழிலாளர்கள் வரவில்லை, 365 நாட்கள் கடுமையாக உடல் உழைப்பை கொடுத்து வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அதை தவறாக கூற முடியாது” என்றார்.

மேலும், மதுவிலக்கை எதிரானது இந்த இயக்கம் தான் மதிமுக, வைகோவின் தாயார் நூறு வயதில் மதுவிற்கு எதிராக போராடி உயிரிழந்தார். எனவே ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் நினைத்தால் மது கடைகளை முழுமையாக மூடலாம். அரசுக்கும் கடமை உள்ளது. அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் தெரிவித்து மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், முழுமையாக அரசை மட்டும் குறை சொல்ல முடியாது என்று கூறியவர், மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும், அவ்வாறு ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மாறுவார்கள் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் வரவேற்கக் கூடியது.இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
Embed widget