மேலும் அறிய

BJP Congress Politics: குட்டையை குழப்பும் அரசியல் கட்சிகள்..யார் யாருக்கூட போறீங்க..! பாஜக - பிஆர்எஸ் - காங்., முக்கோண கூட்டணி

தெலங்கானாவில் பிரதமர் மோடி பேசியதும், டிவிட்டரில் ராகுல் காந்தி போட்ட பதிவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் பிரதமர் மோடி பேசியதும், டிவிட்டரில் ராகுல் காந்தி போட்ட பதிவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல்:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்துள்ளன. கடந்த 2 தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்ற பாஜக இந்த முறையும் வென்று ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்ந்து பாஜகவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தெலங்கானாவில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் புதிய கூட்டணி கணக்குகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திரசேகர் ராவின் அரசியல்:

தெலங்கானா முதலமைச்சராக உள்ள சந்திரசேகர் ராவ் ஒரு மாதத்திற்கு முன்பு வரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பாஜகவை வீழ்த்தப்போவதாக கூறி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் தனது கட்சியின் பெயரை பாரதிய ராஷ்ட்ர சமிதி என மாற்றி தான் தேசிய அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரசேகர் ராவ் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென கடந்த மாதம் சந்திரசேகர் ராவின் மகன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, கூட்டணி தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு பாஜகவை விமர்சிப்பதையே சந்திரசேகர் ராவ் தவிர்த்து வந்தார். இதனால், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் பிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைப்பது உறுதி என கூறப்பட்டது.

மோடி போட்ட குண்டு:

இந்த நிலையில் தான் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானாவிற்கு பிரதமர் மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது, வாராங்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி “சந்திரசேகர ராவின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டன. ஊழலில் தெலங்கானாதான் நாட்டிலேயே முதல் இடம் வகிக்கிறது. இவர்களது ஊழல் டெல்லி வரை பரவி உள்ளது. சில மாநிலங்கள் அண்டை மாநில உதவியோடு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது சகஜம். ஆனால், முதன் முறையாக இரு மாநிலங்களும் இணைந்து ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு குடும்ப அரசியலில் மாநிலம் சிக்கும் என்பதை மக்கள் ஊகிக்க வில்லை போலும்.  மாநில அரசு கடந்த 9 ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை கூற வேண்டும்” என வினவினார். பிரதமர் மோடியின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளால், பாஜக மற்றும் பிஆர்எஸ் கூட்டணி என்ற கணக்கு தற்போது தவிடுபொடியாகியுள்ளது.

ராகுல் போட்ட ட்வீட்:

பாஜக - பிஆர்எஸ் மோதிக்கொண்டிருக்க, மறுபுறம் ஒருங்கிணைந்த ஆந்திராவின் மறைந்த முதலமைச்சரான  ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 74-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையோட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். ஆந்திர பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவர் எப்போதும் மக்களால் நினைவுகூறப்படுவார்” என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

ராகுலுக்கு ஷர்மிளா பதில்:

ராகுலின் டிவீட்டிற்கு ஒய்எஸ்ஆர் மகளும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ராகுல் காந்தி ஜி. ஒய்எஸ்ஆர் ஒரு உறுதியான காங்கிரஸ் தலைவர். தெலுங்கு மக்களுக்கான சேவையில் அவர் இறந்தார். உங்கள் தலைமையின் கீழ் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். டாக்டர் ஒய்எஸ்ஆர் உங்கள் இதயத்தில் நிலைத்திருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரசில் இணையும் ஷர்மிளா?

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் மோகன், கட்சியை தொடங்கி தற்போது ஆட்சியும் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தான் அவரது சகோதரியான ஷர்மிளா  ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி, சந்திரசேகர் ராவை எதிர்த்து தீவிரமாக களமாடி வருகிறார். மக்கள் மத்தியில் ஓரளவிற்கு இவர் பிரபலமானாலும், கட்சியை இன்னும் முழுமையாக மக்களிடையே கொண்டு செல்ல முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தியை பாராட்டி பேசியிருப்பதன் மூலம், ஷர்மிளா கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைய தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் மகளான ஷர்மிளாவை, காங்கிரஸின் முக்கிய முகமாக கூட அக்கட்சி பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரசேகர் ராவை, ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழப்பும் கூட்டணி:

நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் கூட்டணி நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை கண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசியவாத காங்கிரசின் பாதி எம்.எல்.ஏக்களை பிரித்துக்கொண்டு, பாஜக கூட்டணியில் ஐக்கியமானார் அஜித் பவார். ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக - பிஆர்எஸ் கூட்டணி எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. காங்கிரச் உடன் கூட்டணி அமைக்கவும், எதிர்த்து களமாடவும் சில கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், தேர்தல் நேரத்தில் யார் யாருடன் சேருவார்கள், எந்த கட்சி எந்த கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை அடைய தொடங்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget