"தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்.. தலைவனாக பெருமைப்படுகிறேன்.." உதயநிதியால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என கூறினார்.
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என கூறினார்.
பெருமைப்படுகிறேன்:
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்நடைபெற்றது. திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதியின் தந்தையாக மட்டும் இல்லை தலைவனாக பெருமைப்படுகிறேன் என்றார்.
மேலும், “உதயநிதிக்கு தந்தையாக இருந்து மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியை பார்த்து வருகிறேன், இதில் நல்ல செய்தியும் வருகிறது கேலி செய்து கிண்டல் செய்து செய்தியும் வருகிறது. அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். மூன்றரை வருடம் இளைஞரணி நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளாததற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. ஆனால் இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன்.
திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது” என்றார். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்தாலும் கட்சிக்கு எழுச்சி தேடி தந்ததில் பெரும் பங்காற்றினார்.
இளைஞரணி:
அரசாங்கம் செய்ய வேண்டிய நீர் நிலைகளை பாதுகாப்பதை, இளைஞர் அணி மூலம் அறிக்கை வெளியிட்டு நீர் நிலைகளை சுத்தம் செய்யுங்கள் என்று உத்தரவிட்டவர் உதயநிதி ஸ்டாலின் எனக் குறிப்பிட்டார்.
இந்தி திணிப்பு போராட்டம், நீட் தேர்வு எதிரான போராட்டம், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் என பல போராட்டங்களை இளைஞரணி சார்பில் செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, 1967 ஆம் அண்டு தான் திமுக முதல் முதலில் அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்தது. திமுக தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிடும் என்று கூறவில்லை ஆனால் இப்போது தொடங்கும் கட்சி எல்லாம் ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்லி தான் கட்சியே தொடங்குகிறது. ஆனால் திமுக அப்படி இல்லை.
திராவிட மாடல்:
திராவிட மாடல் திராவிட மாடல் என்று இன்று முழங்கிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி இருக்கிறது அதற்காக பாடுபட்ட குரல் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள், அந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அண்ணா உடல்நிலை சீறில்லாத போது கூட தமிழ்நாடு பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்படி தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று அப்போது அண்ணா கேட்டார் ஆனால் தற்பொழுது யாரோ ஒருவன் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று புலம்பிக் கொண்டு இருக்கிறான். அதற்கு மேல் விளம்பரப்படுத்த வேண்டாம் என ஆளுநரை ஒருமையில் விமர்சித்தார் தமிழ்நாடு முதலமைச்சர்.