மேலும் அறிய

Nainar Nagendran: எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவரகாத்தில் நயினார் நாகேந்திரன் மே -2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் என்னுடையது இல்லை என்றும் காவல் துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்ரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லபட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், பெருமாள், நவீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்தவர் என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது தாம்பரம் காவல் நிலையம். 

நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மே-2ம் தேதி ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

 தியாகராயர் நகர் பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசுகையில், ” மே-2 ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இது என்னை முழுக்க முழுக்க டார்கெட் செய்யப்பட்டதாகும். இதை அரசியல் சூழ்ச்சி என்றுதான் சொல்வேன். உங்களுக்கே தெரியும். தழிழ்நாட்டில் இதுவரை எத்தனை கோடி ரூபாய் பிடித்திருக்கிறார்கள். இதுவரை 200 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். யாரோ ரூ.4 கோடி பணம் வைத்திருந்ததற்காக என் பெயரையும் சேர்த்துள்ளனர். 200 ரூபாய் கோடி பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள் தொழிலுக்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தப் பணம் என்னுடையது இல்லை. எனக்கும் பிடிக்கப்பட்ட பணத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. அதோடு, யாரோ ஒருவர் என்னுடைய பெயரை பயன்படுத்தியதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். கைது செய்யப்பட்டவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனால் பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறையினர் மிரட்டி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கலாம். எனக்கு நிறைய பேரை தெரியும். காவல் துறையினர் அவர்கள் கடமையை செய்கின்றனர். நான் முழு ஒத்துழைப்பை தருவேன். சம்மனுக்கு ஆஜாராகுவேன். இதில் யார் மீது நான் குற்றம் சொல்வது?” என்று தெரிவித்துள்ளார்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss Vs Anbumani: முடங்குமா மாம்பழம் சின்னம்.? அன்புமணிக்கு செக்.! ராமதாஸ் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்
முடங்குமா மாம்பழம் சின்னம்.? அன்புமணிக்கு செக்.! ராமதாஸ் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Vs Anbumani: முடங்குமா மாம்பழம் சின்னம்.? அன்புமணிக்கு செக்.! ராமதாஸ் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்
முடங்குமா மாம்பழம் சின்னம்.? அன்புமணிக்கு செக்.! ராமதாஸ் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
International Conference Center : செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Embed widget